நீதிபதி இளஞ்செழியன் மீதான துப்பாக்கி சூடு வழக்கில் புதிய சிக்கல்! நீதிமன்று அதிரடி நடவடிக்கை!

0
620

யாழ். நல்லூர் ஆலயத்தின் வடக்கு வீதியில் கடந்த வருடம் ஜூலை மாதம் 22ஆம் திகதி முன்னாள் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் பயணித்த வாகனம் மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமை அறிந்ததே. Judge Ilanchelian Jaffna Nalloor Gun Shot Case Issue Raises

இதில் நீதிபதி இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் உயிரிழந்ததுடன், இந்த சம்பவத்தில் மூவர் சந்தேகத்தின் பெரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களிடம் தொடர் விசாரணைகள் நடைபெற்று வருகின்றது.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரின் விளக்கமறியல் காலம் எதிர்வரும், 23ஆம் திகதியுடன் ஒரு வருடம் நிறைவடைகின்றது.

1997ஆம் ஆண்டு பிணைச்சட்டம் பிரிவு 16இன் கீழ் ஒருவரை ஒருவருடத்திற்கு மாத்திரமே விளக்கமறியலில் வைக்க முடியும். அதற்கு மேல் விளக்கமறியலில் வைக்க வேண்டுமானால் சட்டமா அதிபரே மேல் நீதிமன்றில் பிணை விண்ணப்பம் செய்ய வேண்டும்.

அந்த வகையில் நேற்று குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சமயம் குறித்த நபரின் விளக்கமறியல் காலத்தை நீடிக்குமாறு சட்டமா அதிபர் சார்பில் அரச சட்டவாதி நாகரட்ணம் நிசாந்த் மேல் நீதிமன்றில் முன்னலையாகி கோரிக்கை விடுத்திருந்தார்.

இவர்களை வெளியில் விட்டால் சாட்சிகளுக்கு ஆபத்து ஏற்படும் எனவும், இவர்கள் தலைமறைவாகக் கூடும் எனவும் அரச சட்டவாதி தமது விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இதன் பிரகாரம் சந்தேக நபரின் விளக்கமறியல் காலத்தை மேலும் ஒரு வருடத்திற்கு நீடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites