இன்றைய ராசி பலன் 09-06-2018

0
1071
Today horoscope 09-06-2018

இன்று!

விளம்பி வருடம், வைகாசி மாதம் 26ம் தேதி, ரம்ஜான் 24ம் தேதி,
9.6.18 சனிக்கிழமை, தேய்பிறை, தசமி திதி காலை 9:18 வரை;
அதன்பின் ஏகாதசி திதி, ரேவதி நட்சத்திரம் இரவு 8:03 வரை;
அதன்பின் அசுவினி நட்சத்திரம், மரண, சித்தயோகம்.(Today horoscope 09-06-2018)

* நல்ல நேரம் : காலை 7:30–9:00 மணி
* ராகு காலம் : காலை 9:00–10:30 மணி
* எமகண்டம் : மதியம் 1:30–3:00 மணி
* குளிகை : காலை 6:00–7:30 மணி
* சூலம் : கிழக்கு

பரிகாரம் : தயிர்
சந்திராஷ்டமம் : உத்திரம், அஸ்தம்
பொது : பெருமாள், சனீஸ்வரர் வழிபாடு

மேஷம்:

பிறரை நம்பி எவருக்கும் வாக்குறுதி தர வேண்டாம். தொழில், வியாபார நடைமுறை சீராக கூடுதல் உழைப்பு அவசியம். சராசரி பணவரவு கிடைக்கும்.அரசியல்வாதிகள் சமரசம் பேசுவதில் நிதானம் பின்பற்ற வேண்டும்.

ரிஷபம்:

வளர்ச்சிக்கான திட்டங்களை தீட்டுவீர்கள். நண்பரின் ஆலோசனையால் நன்மை உண்டாகும். தொழில், வியாபாரத்தில் உற்பத்தி, விற்பனை செழிக்கும். வெகுநாள் வாங்க நினைத்த பொருள் வந்து சேரும். பணியாளர்களுக்கு சிறந்த பணிக்காக பாராட்டு, வெகுமதி கிடைக்கும்.

மிதுனம்:

நற்செயலில் ஈடுபட்டு பெருமிதம் காண்பீர்கள். தொழில், வியாபாரத்தில் பணவரவும், நன்மையும் அதிகரிக்கும். வாழ்க்கைத்தரம் உயரும். இஷ்ட தெய்வ வழிபாடு நிறைவேறும். அரசியல்வாதிகளுக்கு, எதிர்ப்பாளரால் இருந்த தொல்லை குறையும்.

கடகம்:

சிலரது பேச்சு உங்களை சங்கடப்படுத்தலாம். தொழிலில் உற்பத்தி, விற்பனை சுமாரான அளவில் இருக்கும். புதிய இனங்களில், திடீர் செலவு அதிகரிக்கும். பெண்கள் அதிக பயன்தராத பொருள் வாங்க வேண்டாம். சீரான ஓய்வு உடல்நலம் பெற உதவும்

சிம்மம்:

முக்கிய பணி ஒன்றை மறந்திடுவீர்கள். குடும்ப உறுப்பினர் நினைவுப்படுத்தி உதவுவர். தொழில், வியாபாரத்தில் கூடுதல் பணிச்சுமை ஏற்படும். பணவரவு சுமாராக இருக்கும்.கண்களின் பாதுகாப்பில் கவனம் வேண்டும்.

கன்னி:

பூர்வபுண்ணிய நற்பலன் துணை நிற்கும். தொழில், வியாபாரம் வியத்தகு வளர்ச்சி பெறும்.உபரி பணவருமானம் வந்து சேரும். பெண்கள் வீட்டு உபயோகப்பொருள் வாங்குவர். மனைவி கூடுதல் அன்பு, பாசத்துடன் நடந்து கொள்வார்.

துலாம்:

போட்டி பந்தயங்களில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. தொழில்,வியாபாரத்தில் அளவான உற்பத்தி, விற்பனை இருக்கும். லாபம் சீராக இருக்கும். பணியாளர்கள் பணி விஷயமாக வெளியூர் செல்வர். அறிமுகம் இல்லாதவர்களிடம் நெருக்கம் வேண்டாம்.

விருச்சிகம்:

நண்பரிடம் கேட்ட உதவி கிடைக்கும். செயல்களில் பொறுப்புணர்வுடன் ஈடுபடுவீர்கள். தொழில், வியாபாரத்தில் புதிய வளர்ச்சி உருவாகும். பணவரவும், நன்மையும் அதிகரிக்கும். உறவினர் மூலம் சுபசெய்தி வந்து சேரும்.

தனுசு:

இரக்க குணத்தால் பிறருக்கு உதவுவீர்கள். தொழில், வியாபாரத்தில் வருகிற இடையூறுகளை தாமதமின்றி சரி செய்வது நல்லது. குறைந்த அளவில் பணவரவு இருக்கும்.உடல் நலத்திற்கு சிறு அளவிலான மருத்துவ சிகிச்சை தேவைப்படும்

மகரம்:

தொல்லை கொடுத்தவர், இடம் மாறிப் போகிற சூழ்நிலை ஏற்படும். தொழில், வியாபாரத்தில் உற்பத்தி, விற்பனை அதிகரிக்கும். வருமானம் திருப்தியளிக்கும். விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள். தாயின் தேவையை நிறைவேற்றி ஆசி பெறுவீர்கள்

கும்பம்:

உங்கள் மனதில் ஆன்மிக எண்ணம் மேலோங்கும். தொழில், வியாபாரத்தில் தாராள முன்னேற்றம் உருவாகும்.பணவரவு திருப்திகரமாக இருக்கும்.மாமன், மைத்துனருக்கு தேவையான உதவி செய்வீர்கள். பிள்ளைகளால் நன்மை உண்டாகும்

மீனம்:

வழக்கத்திற்கு மாறான பணி உருவாகி தொந்தரவு தரலாம். தொழில், வியாபாரத்தில் அளவான மூலதனம் போதும். நிலுவைப்பணம் கூடுதல் முயற்சியால் கிடைக்கும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

மேலும் பல சோதிட தகவல்கள்   

எமது ஏனைய தளங்கள்

Keyword:Today horoscope 09-06-2018