வயோதிபர்களை தாக்கிவிட்டு பெருந்தொகை நகைகள் கொள்ளை – யாழில் அரங்கேறும் கொடூரங்கள்

0
384
tamilnews jaffna manippai eight pawn jewelry robbery today

(tamilnews jaffna manippai eight pawn jewelry robbery today)

மானிப்பாய் பொலிஸ் பிரிவில் வீடொன்றுக்குள் நுழைந்த கொள்ளைக் கும்பல், அங்கு வசித்த வயோதிபத் தம்பதியரைத் தாக்கிவிட்டு 8 பவுண் தங்க நகைகள் உள்பட பெறுமதியான பொருள்களை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் மானிப்பாய் ஆனந்தா வீதியில் இடம்பெற்றது.

கொள்ளையர்களின் தாக்குதலில் தலையில் காயமடைந்த குருநாதர் இரட்ணம் (வயது -69) என்ற வயோதிப மாது யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார், தடயவியல் பொலிஸாருடன் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

விசாரணைகளின் பின்னரே கொள்ளையிடப்பட்ட பொருள்கள் தொடர்பில் சரியான தகவலை வழங்க முடியும் என்று பொலிஸார் கூறியுள்ளனர்.

(tamilnews jaffna manippai eight pawn jewelry robbery today)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

 Tamil News Group websites