‘காலா’வை பேஸ்புக் லைவ்வில் வௌியிட்ட சிங்கப்பூர்வாசி கைது

0
701
tamilnews Praveen arrested Singapore Facebook live kaala

(tamilnews Praveen arrested Singapore Facebook live kaala)

சிங்கப்பூரில் இருந்து காலா திரைப்படத்தை பேஸ்புக் மூலமாக லைவ்வாக ஒளிபரப்பிய பிரவீன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிங்கப்பூர் கேத்தே திரையரங்கிலிருந்து பேஸ்புக்கில் காலா திரைப்படத்தை 45 நிமிடங்கள் லைவ்வாக வௌியிட்டதால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது.

இந்தநிலையில், பிரவீன் என்ற நபரை சிங்கப்பூர் பொலிசார் கைது செய்துள்ளனர்.

பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா திரைப்படம் நாளை வெளியாகிறது.

இந்தத் திரைப்படத்தில் ரஜினிகாந்த், ஈஸ்வரி, சமுத்திரக்கனி ஆகியோர் நடித்துள்ளனர்.

படத்திற்கான இணையம் மூலமான பற்றுச்சீட்டு ஒதுக்கீடுகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகியது.

சென்னையில் பல திரையரங்குகளில் வார இறுதி நாட்களுக்கே டிக்கெட் கிடைப்பதாகவும், இணைய முன்பதிவு மந்தமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்தநிலையில், சென்னை கமலா திரையரங்கில் நாளை காலா திரைப்படத்திற்கு பதில், ஜூராசிக் வேல்டு திரைப்படம் திரையிடப்படும் என கமலா திரையரங்கின் மேலாளர் கோபி தகவல் தெரிவித்துள்ளார்.

(tamilnews Praveen arrested Singapore Facebook live kaala)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

 Tamil News Group websites