தமிழின அழிப்பிற்கான கவனயீர்ப்புப் போராட்டம்!

0
621
Créteil protest againstt tamil destruction

பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மற்றும் பிரான்ஸ் தமிழ்ச் சங்கங்களின் ஏற்பாட்டில் மே மாதம் முழுவதும் தமிழின அழிப்பிற்கான கவனயீர்ப்புப் போராட்டங்கள் பாரிஸை அண்மித்த நகரங்களின் நகரசபை முன்றலில் நடைபெற்று வருவதோடு. மாநகரசபை நகரபிதாக்கள், துணைநகரபிதாக்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் போன்றோரை சந்தித்து கோரிக்கையடங்கிய மனுக்களும் கையளிக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் 30.05.2018 Val De Marne பகுதியில் உள்ள Créteil மாநகரசபை முன்றலில் பிராங்கோ தமிழ்ச்சங்கம் கிறித்தலின் ஏற்பாட்டில் (Association des Franco Tamouls de Créteil) தமிழின அழிப்பிற்கான கவனயீர்ப்புப் போராட்டம் பிற்பகல் 3 மணிமுதல் 5.30 மணிவரை நடைபெற்றது.

குறித்த நிகழ்வில் கிறித்தல் மாநகர சபையின் பிரதி நகரபிதா (adjoint Maire de Créteil) Mme Brigitte JEANVOINE அவர்கள் கலந்து கொண்டு கோரிக்கை அடங்கிய மனுவையும் பெற்றுக்கொண்டார்.

தொடர்ந்து கிறித்தல் நகரபிதாவின் அலுவலக அதிகாரியும் கவனயீர்ப்பில் கலந்துகொண்டார். கிறித்தல் வாழ் பல்லின மக்களுக்கும் போராட்டம் மற்றும் இனவழிப்பு பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, கிறித்தல் பிராங்கோ தமிழ்ச் சங்கத்தின் தலைவர் அவர்கள் மக்கள் முன் உரையாற்றினார். அவரைத் தொடந்து பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு சார்பாக திரு.ரூபன் அவர்கள் உரையாற்றினார். அவர் உரையாற்றும் போது இவ்வாறு தாம் தொடர்ந்து போராடவேண்டும், இளையோர்கள் மூலம் போரட்டத்தை நாம் வாழும் நாட்டின் அரசுக்கும் மக்களுக்கும் கொண்டு சேர்க்கவேண்டும் என்று கூறினார்.

அவரின் உரையைத் தொடர்ந்து. தமிழரின் தாரக மந்திரதுடன் கிறித்தல் கவனயீர்ப்புப் போராட்டம் நிறைவு பெற்றது.

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**