பிரான்ஸில், வீடு ஒன்றிலிருந்து பல மண்டையோடுகள் மீட்பு!

0
706
17 skulls found France house

பிரான்ஸில், வீட்டின் கூரை ஒன்றுக்குள் இருந்து மனிதர்களின் மண்டையோடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 17 skulls found France house

Toulouse நகரிலுள்ள வீட்டின் கூரைக்குள் 17 மண்டையோடுகள் மூட்டை ஒன்றில் கட்டிவைக்கப்பட்டு ஒளித்து வைக்கப்பட்டுள்ளது. கட்டிடம் ஒன்றின் நிர்மானப்பணிகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த போது, அங்கு வேலை செய்த தொழிலாளி ஒருவரால் இந்த மண்டையோடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர், மண்டையோடுகளை கைப்பற்றினர்.

இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலிருந்து, இவை கடந்த 2010-ம் ஆண்டு, Toulouse நகரிலுள்ள விஞ்ஞான ஆய்வு கூடத்தில் வைத்து கொள்ளையிடப்பட்டிருந்தவை என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது மண்டையோடுகள் Toulouse நகர காவல்நிலையத்தில் மேலதிக விசாரணைகளுக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**