(Tamizh Padam 2 Official Teaser Released)
சி.எஸ்.அமுதன் இயக்கத்தில், நடிகர் சிவா நடித்திருக்கும் ”தமிழ்படம் 2.0” படத்தின் டீஸர் தற்போது வெளியாகியுள்ளது.
அதாவது, கடந்த 2010-ம் ஆண்டில் சிவா நடிப்பில் வெளியான படம் ”தமிழ்ப்படம்”. ஸ்பூஃப் ஜானரில் (நய்யாண்டி) வெளிவந்திருந்த இந்தப் படம் தமிழ் திரைப்படங்களில் பின்பற்றும் ஃபார்முலாக்களையும், பல படங்களின் சீன்களையும் கிண்டலடித்ததோடு, பல நடிகர்களையும் நய்யாண்டி செய்திருந்தது.
இப்படத்தை சி.எஸ்.அமுதன் இயக்கியிருந்தார். அதுவரையிலான தமிழ் திரைப்படங்களிலிருந்து சற்று வித்தியாசமாக மேற்கொள்ளப்பட்ட அமுதனின் அந்த முயற்சி வெற்றியைத் தந்தது. சினிமா ரசிகர்களும் படத்தை வெகுவாக ரசித்தனர்.
இதையடுத்து ”தமிழ்ப்படம் 2.0” என்ற பெயரில் ”தமிழ்ப்படம்” இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு முதல் தொடங்கி நடைபெற்று வந்தது.
இப்படத்தில் சிவாவுக்கு ஜோடியாக திஷா பாண்டே நடித்துள்ளார். மற்றொரு கதாநாயகியாக ஐஸ்வர்யா மேனன் தோன்றுகிறார்.
இந்த படத்தின் போஸ்டரில் தமிழ்நாட்டு அரசியலைக் கலாய்த்து வெளியிட்டிருந்தது படக்குழு. துணை முதல்வர் பன்னீர்செல்வம் மெரினாவில் தியானம் செய்தது போன்று சிவா அமர்ந்து தியானம் செய்யும் காட்சி போஸ்டரில் இடம்பெற்றிருந்தது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அனைவரிடமும் அதிகரிக்கச் செய்திருந்தது.
அத்துடன், இப் படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்துள்ள நிலையில், தற்போது டீஸர் வெளியிடப்பட்டுள்ளது. இதில் அஜித், விஜய், விஷால், விஜய் சேதுபதி என ஒருவரையும் விட்டு வைக்காமல் அனைவரையும் கலாய்த்துள்ளார்.
Video Source : Y Not Studios
<MOST RELATED CINEMA NEWS>>
* இணையத்தில் வைரலாகும் “காலா” பட டிரைலர்..!
* ஜான்வி கையைப் பிடித்து இழுத்து முதுகில் தடவிய ரசிகர்களினால் பரபரப்பு..!
* ஜெமினி கணேசன் ஆவணப்படம் : சாவித்திரிக்கு எதிரான காட்சிகளா..!
* தோனி நாட்டின் பிரதமராக மாறினால்..? : விக்னேன் சிவனின் பரபரப்பு டுவீட்..!
* அம்மன் தாயி ஆக இரட்டை வேடத்தில் கலக்கும் பிக் பாஸ் ஜூலி..!
* போதைப் பொருள் வழக்கில் கைதான பெண்ணுக்காக டிரம்ப்பிடம் வாதிட்ட கிம் கர்தாஷியான்..!
* கவர்ச்சிப் புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்பு தேடும் வயதான நடிகை..!
* அப்பா என்றாலும் வயதுக்கு வந்த மகளுடன் இப்படியா.. ? : அமீரை விளாசித்தள்ளும் மக்கள்..!
* எவ்வளவு கஷ்டப்பட்டு நடித்தாலும் பயன் இல்லை : அனுஷ்கா பகீர் பேட்டி..!
Tags :-Tamizh Padam 2 Official Teaser Released
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Technotamil.com
- Timesrilanka.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- Worldtamil.news
- Tamilsportsnews.com
Our Other Sites News :-