monkey robbed 2 lakh police confused fact division case registered
இந்தியாவில் வங்கியொன்றிலிருந்து வெளியே வந்த வர்த்தகர் ஒருவரிடமிருந்து 2 இலட்சம் ரூபா பணத்தை அங்கிருந்த குரங்கு ஒன்று பறித்துச் சென்றுள்ளதையடுத்து, இந்த கொள்ளைக் குறித்து எந்தப் பிரிவில் வழக்கு பதிவு செய்வது என்பது தெரியாமல் பொலிஸார் குழம்பியுள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவைச் சேர்ந்தவர் விஜய் பன்சால். இவர் உள்ளூரிலுள்ள வங்கியொன்றில் 2 இலட்சம் ரூபா பணத்தை எடுத்து தனது பையில் சுற்றி தனது மகளிடம் கொடுத்துள்ளார்.
அப்போது திடீரென சில குரங்குகள் அவர்களை சூழ்ந்து அவர்களைத் தாக்க முயன்றுள்ளன. அதில் ஒரு குரங்கு கையில் வைத்திருந்த பணப்பையை பறித்துக் கொண்டு ஓடியதையடுத்து, அந்த குரங்கை விஜய் பன்சால் மற்றும் அங்கிருந்தவர்கள் விரட்டியபடி சென்றுள்ளனர்.
ஆனால் குரங்கு அருகில் இருந்த கட்டிடத்தின் மாடிக்கு தாவிச் சென்று அமர்ந்து கொண்டது. சற்று நேரத்துக்கு பின்னர் பணப் பையிலிருந்து ரூபா நாணயத்தாள்களை கிழித்தபடி வீசி ஏறிந்துள்ளது. சுமார் 60 ஆயிரம் ரூபா பணத்தை இதுபோலவே வீசி எறிந்த குரங்கு, பின்னர் பணத்துடன் அங்கிருந்து ஓடியுள்ளது.
60 ஆயிரம் ரூபாவை குரங்கிடம் இருந்து மீட்ட விஜய் பன்சால், மீதமுள்ள ஒரு இலட்சத்து 40 ஆயிரம் ரூபா பணத்தை இழந்துள்ளார்.
பின்னர் இதுபற்றி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். ஆனால் பொலிஸார், குரங்கு தாக்கியதாக வழக்கு பதிவு செய்ய முடியும், குரங்கு கொள்ளையடித்ததாகவோ அல்லது பணத்தை பறித்துச் சென்றதாகவோ வழக்குப் பதிவு செய்ய முடியாது. இந்த சம்பவம் தொடர்பாக எப்படி வழக்கு பதிவு செய்வது என குழம்பியுள்ளனர்.
இதையடுத்து மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து விஜய் பன்சால் முறைப்பாடு செய்துள்ளார். உரிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து குரங்கை தேடி பணத்தை மீட்டு தருமாறு கோரியுள்ளார்.
monkey robbed 2 lakh police confused fact division case registered
More Tamil News
- தேசிய மனித உரிமைகள் ஆணையக்குழு தூத்துக்குடி செல்கிறது!
- ப.சிதம்பரம் இன்று சிபிஐ முன் ஆஜர் – முன்ஜாமீன் கிடைக்குமா?
- ராகுல்காந்தியின் ஆசீர்வாதத்தால்தான் முதல்வர் ஆனேன் – கர்நாடக முதல்வர் குமாரசாமி!
- ரஜினிகாந்த் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் – சரத்குமார் பேட்டி!
- ரஜினி வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு!
- யார் சமூகவிரோதிகள்? – ரஜினியின் கருத்துக்கு கொந்தளித்த சீமான்!
- ஆதின மடத்திற்குள் நுழைய நித்யானந்தாவிற்கு தடையா?
- கச்சநத்தம் படுகொலை ஒவ்வொரு தமிழனுக்குமான அவமானம் – சீமான் வேதனை!
- சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு தடை!
Tamil News Group websites :