பிரான்ஸ் நாட்டின் குடியேற்றவாசிகள் கடைபிடிக்க வேண்டிய சட்டங்களும் நடைமுறைகளும்!

0
2064
France immigrants follow laws

* பிரான்ஸ் நாட்டில் தலைமை பதவியில் இருப்பவரின், பெயரை கிண்டலடிக்கக்கூடாது. உதாரணம்- ஒரு பன்றிக்கு நெப்போலியனின் பெயரை வைக்கக்கூடாது. நெப்போலியன் மற்றும் அவர் வழிவந்தவர்கள் ஆட்சியில் இருந்தவரை இந்த சட்டம் அமுலில் இருந்தது. பிறகும் தொடர்ந்தது. 2013-ம் ஆண்டு தான் விலக்கிக் கொள்ளப்பட்டது.France immigrants follow laws

* முன்னாள் பிரான்ஸ் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோசிஸை 2008-ல் ஒருவர் ‘A Jerk’ என அழைத்தான். இவனுக்கு 30 யூரோ அபராதம் விதிக்கப்பட்டது.

* பிரான்ஸில் இறந்தவரை, திருமணம் செய்து கொள்வது காலம் காலமாய் தொடர்கிறது. சட்டப்படி அந்த நாட்டில் இறந்த ஒருவரை, திருமணம் செய்ய எண்ணியிருந்த பெண்ணுக்கு, இறந்த பிறகும் திருமணம் செய்து கொள்ளும் உரிமை உண்டு. 1959ல் ஜனாதிபதி சார்லஸ் டிகாலே பிரெஜுப் என்ற நகரத்திற்கு சென்றிருந்தார். அங்கு ஒரு அணை திடீரென உடைந்து, பல உயிர்களை காவு வாங்கியிருந்தது.

அங்கு ஒரு பெண்ணை சந்தித்தார். அந்த பெண்ணின் வருங்கால கணவரும் அந்த விபத்தில் இறந்து போயிருந்தார். அவர், இறந்தவரையே மணக்க விரும்புகிறேன் என விடாப்பிடியாக கூறியபோது, ஜனாதிபதி அதனை ஏற்றதுடன் சட்டமாகவும் மாற்றி விட்டார். இப்போதும் பிரான்ஸில் பல டஸின்களில் இத்தகைய இறந்தவரை திருமணம் செய்வது தொடர்கிறது. இது அநேகமாக திருமணம் என ஏற்பட்ட ஆசையை நிறைவு செய்து கொள்வதற்காகவே நடக்கிறது என கூறலாம்.

* தென்கிழக்கு பிரான்ஸில் வெளி உலகிலிருந்து வந்து இறங்குதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. எங்கே?‘‘சாட்டியயுனெயுப்-டூ-பாப்பே’’ என்ற இடத்தில் ஒயின்கள் தயாரிக்க உதவும் திராட்சை பண்ணைகள் உள்ளன. இவற்றில் வந்து இறங்கி, திராட்சையையும், ஒயினையும் திருடிக்கொண்டு போய் விடக்கூடாது என்ற சட்டம் இன்று வரை அமுலில் உள்ளது.

Source by- தினகரன்

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**