சிலாங்கூரில் புதிய அரசாங்கம் மலாய் மொழியையும் இஸ்லாம் சமயத்தையும் மேன்மைப்படுத்த வேண்டும்!

0
948
Selangor honor develop Malay, malaysia tami news, malaysia, malaysia news, anvar,

{ Selangor honor develop Malay }

மலேசிய: சிலாங்கூரில் புதிய அரசாங்கம் மலாய் மொழியையும் இஸ்லாம் சமயத்தையும் மேன்மைப்படுத்துவதோடு இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தைப் பாதுகாக்க வேண்டுமென சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷாராபுடின் இட்ரிஸ் ஷா வலியுறுத்தியதாக நம்பிக்கைக் கூட்டணியின் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

இன்று ஷா ஆலமிலுள்ள புக்கிட் காயாங்கான் அரண்மனையில் மாநில சுல்தானைச் சந்தித்து சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக சந்திப்பு நடத்திய அவர் அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், மாநில புதிய மந்திரி பெசாரை நியமிப்பது குறித்தும் மாநில எதிர்காலம் குறித்தும் நாட்டில் ஏற்பட்டுள்ள உருமாற்ற வளர்ச்சி குறித்தும் விவாதிப்பதற்கு நேரம் ஒதுக்கிய சிலாங்கூர் சுல்தானுக்கு நன்றியைக் கூறிக்கொண்டதாக அன்வார் கூறியுள்ளார்.

மேலும், புதிய அரசாங்கத்தில் தமக்கு பதவிகள் ஏதும் இல்லை என்றாலும் பிரதமர் துன் டாக்டர் மகாதீரின் தலைமைத்துவத்திற்கு உதவிகளை வழங்க தாம் தயாராக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

அன்வாருடன் சிலாங்கூர் மந்திரி பெசாரும் பொருளாதார விவகாரத்துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ அஸ்மின் அலியும் உடனிருந்துள்ளார்.

Tags: Selangor honor develop Malay

<< RELATED MALAYSIA NEWS>>

*மலேசிய நம்பிக்கை நிதிக்கு 24 மணி நேரத்தில் 70 லட்சம் நன்கொடை!

*மலேசிய பிரதமர் மகாதீரின் முகம்மதின் அரசியல் வாழ்க்கையை பாலிவுட் திரைப்படமாகத் தயாரிக்க திட்டம்!

*மலாய் மொழியில் மலேசிய பிரதமருக்கு வாழ்த்து கூறிய நரேந்திர மோடி!

*தலைமறைவாகியுள்ள ஜமால் யூனோஸ் வீடியோ மூலம் கோரிக்கை முன்வைத்துள்ளார்!

*நினைத்ததைவிட நாட்டின் நிலைமை மோசமாக உள்ளது! துன் மகாதீர் அறிவிப்பு

*எம்ஆர்டி-3 ரயில் திட்டம் கைவிடப்படும் டாக்டர் மகாதீர் அறிவிப்பு!

*மலேசிய பிரதமர் துன் மகாதீரின் அதிரடி அறிவிப்புகள்!

*மலேசியாவில் சாலையில் தேங்கிய நீரில் தட்டுகளைக் கழுவிய உணவக ஊழியர்கள்!

<< RELATED MALAYSIA NEWS>>