இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் : நான்கு சுழற்பந்து வீச்சாளர்களை களமிறக்கும் ஆப்கானிஸ்தான்!

0
575
Afghanistan squad vs India maiden Test

(Afghanistan squad vs India maiden Test)

இந்திய அணிக்கெதிரான அறிமுக டெஸ்ட் போட்டிக்கான அணிக்குழாமில் நான்கு சுழற்பந்து வீச்சாளர்களை ஆப்கானிஸ்தான் அணி உள்ளடக்கியுள்ளது.

ஆப்கானிஸ்தான் அணி தங்களது அறிமுக டெஸ்ட் போட்டியில் பலம் மிக்க இந்திய அணியை சந்திக்கவுள்ளது. இந்த போட்டி எதிர்வரும் ஜுன் மாதம் 14ம் திகதி பெங்களூரில் நடைபெறுகின்றது.

இந்த போட்டித் தொடருக்கான ஆப்கானிஸ்தான் குழாமை அறிவித்துள்ள கிரிக்கெட் சபை, நான்கு முக்கிய சுழற்பந்து வீச்சாளர்களை இணைத்துள்ளது.

இதன்படி ஐ.பி.எல். தொடரில் அசத்தல் பந்து வீச்சை வெளிப்படுத்திய முஜிபூர் ரஹ்மான், ரஷீட் கான் உள்ளிட்டோருடன், அமீர் ஹம்ஷா,  இடதுகை சினமன் பந்து வீச்சாளர் ஷயீர் கானையும் இணைத்துள்ளது.

2015-17வரை நடைபெற்ற உள்ளூர் போட்டிகளில் அதிக விக்கட்டுகளை வீழ்த்தியுள்ள ஷாஹீர், ஆப்கானிஸ்தான் அணிக்காக எந்தவொரு சர்வதேச போட்டிகளிலும் விளையாடவில்லை. எனினும் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயற்பட்டு வரும் இவருக்கு கிரிக்கெட் சபை வாய்ப்பை வழங்கியுள்ளது.

இதேவேளை அனுபவ வேகப்பந்து வீச்சாளரான டவ்லட் ஷர்டான் முழங்கால் உபாதை காரணமாக டெஸ்ட் போட்டியிலிருந்து விலகியுள்ள நிலையில், இவருக்கு பதிலாக குழாமின் அறிமுக வீரரான வபடார் இணைக்கப்பட்டுள்ளார்.

அறிவிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி :

அஸ்கார் ஸ்டானிக்ஸாய் (தலைவர்), மொஹது சேஷாட், முஜிபூர் ரஹ்மான், மொஹது நபி, ரஷீட் கான், ஜவான் அஹமதி, நசீர் ஜமல், ரெஹமட் சஹா, ஹஸ்மதுல்லா சஹாதி, அப்ஷர் ஷஷி, அமீர் ஹம்ஷா, செயாட் சிர்ஷாட், யமின் அஹமட்ஷி, வப்டர், ஷஹீர் கான்,

<<Tamil News Group websites>>