பாம்பு கடித்தது தெரியாமல் பாலூட்டிய அன்னை: தாயும் சேயும் மரணம்

0
423
UttarPradesh death mother child has caused child death

UttarPradesh death mother child caused child death

தான் உறங்கும் பொழுது பாம்பு கடித்தது தெரியாமல் அழுத குழந்தைக்கு பாலூட்டியதால் தாயும், குழந்தையும் மரணமடைந்த சம்பவம் ஒன்று இந்திய உத்தரப்பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில் மண்டலா கிராமத்தைச் சேர்ந்த 35 வயது பெண்ணொருவர் அவரது இரண்டரை வயது குழந்தையுடன் நேற்றுமுன்திம் உறங்கிக் கொண்டிருந்துள்ளார்.

நள்ளிரவு நேரத்தில் அந்த பெண்ணுக்கே தெரியாமல் அவரை பாம்பு ஒன்று கடித்துள்ளது. சிறிது நேரத்தில் அவரது அருகிலிருந்த குழந்தை பசியால் பாலுக்கு அழுதுள்ளது. தன்னை பாம்பு கடித்து விட்டது என்பதை அறியாத அப்பெண் குழந்தைக்குப் பாலூட்டியுள்ளார்.

சிறிது நேரத்தில் தாய் மற்றும் குழநதை இருவரும் உயிருக்கு போராடவே, அவர்களை உறவினர்கள் அருகிலிருந்த மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றுள்ளனர்.

ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே தாய் உயிரிழந்துள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்தது. இது குறித்த பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.

UttarPradesh death mother child caused child death

More Tamil News

Tamil News Group websites :