வடகொரிய, தென்கொரிய தலைவர்கள் திடீரென சந்திந்துக் கொண்டனர்

0
404
tamilnews North South Korean leaders meet second time

(tamilnews North South Korean leaders meet second time)

(News Video Source – CNN)

வட கொரியா மற்றும் தென் கொரியாவின் அரச தலைவர்கள் இராணுவம் விலக்கப்பட்ட பகுதியிக்ல் தீடீரென சந்தித்து கொண்டுள்ளனர்.

வட கொரியாவின் கிம் ஜாங்-உன் மற்றும் தென் கொரிய தலைவர் முன் ஜே-இன் ஆகியோர் இரண்டாவது முறையாக இந்த சந்திப்பை நடத்தியுள்ளனர்.

வட கொரியா மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான உச்சி மாநாடு ரத்து செய்யப்பட்ட நிலையில், அதனை மீண்டும் நடத்த முயற்சி மேற்கொள்ளப்படுவதாக அறியமுடிகிறது

ஜூன் 12 ஆம் திகதி நடைபெறவிருந்த உச்சி மாநாட்டை ரத்து செய்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், மீண்டும் மாநாடு நடக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தார்.

இராணுவம் விலக்கப்பட்ட பகுதியில் உள்ள, கூட்டு பாதுகாப்பு பகுதியில் உள்ளூர் நேரப்படி மாலை மூன்று மணி முதல் ஐந்து மணி வரை இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது என மூனின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

வட கொரியா – அமெரிக்கா உச்சி மாநாடு வெற்றிகரமாக நடைபெறுவது தொடர்பாக இருநாட்டு தலைவர்களும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

மேலும் இந்த பேச்சுவார்த்தையின் முடிவுகள் குறித்து நாளைய தினம் தென்கொரிய அதிபர் தெரிவிப்பார் என்றும் முன்னின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

திட்டமிட்டப்படி வட கொரிய அதிபர் கிம்முக்கும் ட்ரம்புக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றால், கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை குறைப்பது குறித்தும் அணு ஆயுதங்களற்ற கொரிய தீபகற்பம் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

(tamilnews North South Korean leaders meet second time)

More Tamil News

Tamil News Group websites :