கடல் வாழின உயிரியல் தொடர்பான இலங்கை நிபுணருக்கு விருது

0
372
Marine biologist wins British Councils first ever Global Alumni Awards

(Marine biologist wins British Councils first ever Global Alumni Awards)

பிரிட்டிஷ் கவுன்சிலின் முதலாவது சர்வதேச அலுமினி விருது (Global Alumni Awards) வழங்கல் நிகழ்வில் இலங்கையைச் சேர்ந்த கடல் வாழின உயிரியல் நிபுணரான ஆஷா டி வோஸ் என்பவருக்கு தொழில்முறை சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது.

கடல் வாழ் பாலூட்டிகள் தொடர்பான ஆராய்ச்சியில் பி.எச்.டி (PhD) பட்டம் பெற்ற முதலாவது இலங்கையர் ஆஷா டி வோஸ் ஆவார்

அவர் இறுதி 62 பேரில் இருந்து தெரிவு செய்யப்பட்டதுடன், பிராந்திய வெற்றியாளர்கள் 21 பேரில் இருந்தும் தெரிவு செய்யப்பட்டு, ஐக்கிய இராச்சியத்தின் குளோபல் அலுமினி விருது பெறும் இறுதி மூன்று நபர்களில் ஒருவராக தெரிவானார்.

ஐக்கிய இராச்சிய பல்கலைக்கழகங்களின் அனைத்து பழைய மாணவர்களும் மூன்று நாடுகளையும் மற்றும் ஐக்கிய இராச்சியத்தில் உள்ள நான்கு உயர் கல்வி நிறுவனங்களையும் பிரதிநிதித்துவம் செய்திருந்தனர்.

இலங்கையைச் சேர்ந்த ஆஷா டி வோஸ் கடல் சார் கல்வியியலாளர் மற்றும் வட இந்திய கடலில் நீலத்திமிங்கிலம் சம்பந்தமான ஆராய்ச்சியில் முன்னோடியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

(Marine biologist wins British Councils first ever Global Alumni Awards)

More Tamil News

Tamil News Group websites :