கைது செய்யும்போது தவறிழைத்த பிரான்ஸ் சைபர் பொலிஸார்!

0
821
France Cyber-crime police arrested wrong person related porn videos

நூற்றுக்கணக்கான குழந்தை ஆபாச திரைப்படங்களை பதிவேற்றம் செய்தவறை கைது செய்யும் போது சைபர் குற்றப்பிரிவு பொலிஸார் தவறாக வேறு ஒருவரை கைது செய்த சம்பவமொன்று பிரான்ஸின் St.Sylvestre பகுதியில் இடம்பெற்றுள்ளது. France Cyber-crime police arrested wrong person related porn videos

இணைய இணைப்பின் IP address ஐ வைத்தே குறித்த நபரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்படட நபர், அந்தக் குற்றச்சாட்டுகளை கடுமையாக மறுத்துள்ளார், ஆயினும், விசாரணையின்போது அந்த பகுதியில் உள்ள நான்கு நபர்கள், அதே IP address ஐப் பகிர்ந்து பாவித்துள்ளனர்.

அந்த நால்வரில் ஒருவரான 28 வயதான அண்டை வீட்டுக்காரரே உண்மையான குற்றவாளி என சைபர் குற்றப்பிரிவு பொலிஸார் மேலதிக விசாரணைகளிலிருந்து கண்டறிந்து கைது செய்துள்ளனர்.

இதனால் தவறுதலாக குற்றம் சாட்டப்பட்டவர் விடுவிக்கப்பட்டதுடன் உண்மையான குற்றவாளி நேற்று பிற்பகல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டார்.

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**