தேனிலவுக்கு செல்ல நேரமில்லை : மனமுடைந்த நமீதா..!

0
1023
Namitha opens talk marriage life,Namitha opens talk marriage,Namitha opens talk,Namitha opens,Namitha

(Namitha opens talk marriage life)

சமீபத்தில் தான் நடிகை நமீதா, வீரா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந் நிலையில், திருமணத்துக்கு பிறகு நமீதா நடிக்க வருவதாக செய்திகள் வருகின்றன. அது குறித்தும் தனது திருமண வாழ்க்கை குறித்தும் நமீதா மனம் திறந்து பேசினார்.

இதுபற்றி அவரிடம் கேட்டபோது கூறியதாவது.. :-

”நான் எதிர்பார்த்ததை விட மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. சரியான துணையை தேர்ந்தெடுக்க தான் இத்தனை நாட்கள் காத்திருந்தேன். வீராவுடனான வாழ்க்கை அற்புதமாக இருக்கிறது.

வீரா என்னை நன்றாக பார்த்துக் கொள்கிறார். தொடர்ந்து நடிக்க சொல்லி உற்சாகப்படுத்துகிறார். என் வாழ்க்கையையே முழுமையாக்கி இருக்கிறது இந்த திருமணம்.

* வீராவின் காதலுக்கு சம்மதம் தெரிவித்தது எப்படி..?

அவர் என்னிடம் காதலை தெரிவித்தபோது அவரை என் மனதுக்கு மட்டுமல்லாது ஆன்மாவுக்கே நெருக்கமானவராக உணர்ந்தேன். அதுதான் சம்மதிக்க காரணம். நன்றாக தெரிந்தவர். நல்ல நண்பர். எனவே ஒருவருக்கொருவர் நன்றாக புரிந்து வைத்திருந்தோம். மிகவும் நேர்மையான ஒரு மனிதர். மனதில் பட்டதை நேரடியாகச் சொல்லக்கூடியவர். எனவே சம்மதித்து விட்டேன்.

* தேனிலவுக்கு எங்கே சென்றீர்கள்..?

இதுவரை போகவில்லை. திருமணமான உடன் இருவருமே பிசியாகி விட்டோம். விரைவில் செல்ல வேண்டும். திட்டமிட்டுக் கொண்டிருக்கிறோம்.

* சமையல் கற்றுக்கொண்டீர்களா..?

என் அம்மாவிடம் கற்றுக்கொண்டேன். புல்கா, சப்பாத்தி, சப்ஜி, சிக்கன், முட்டை என்று வகை வகையாகச் சமைத்து கொடுத்து அசத்துகிறேன். அம்மாவிடம் போனில் பேசி கேட்டுக்கொண்டே சமைக்க தொடங்குவேன்.ஒன்றிரண்டு முறைக்கு பின் தானாகவே அதை சமைக்கிறேன்.

* வீரா எப்போது ஹீரோ ஆகிறார்..?

விரைவிலேயே அதற்கான அறிவிப்பு வருவேன். நிறைய கதைகள் கேட்டு வருகிறோம். சரியான நேரம் அமைவதற்காக காத்திருக்கிறோம்.

* நீங்கள் நடிக்க வருவது பற்றி செய்திகள் வருகிறதே..?

அதை பற்றி இப்போது உறுதிப்படுத்த முடியாது. ஆனால் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. உறுதியானதும் அறிவிப்பு வரும். ஆனால் விரைவில் ஒரு பவர்புல் வேடத்தில் என்னை திரையில் பார்க்கலாம்.

* அரசியல்..?

நடப்பவற்றை கவனித்துக்கொண்டு இருக்கிறேன். ஆனால் இது சரியான நேரம் இல்லை.

* உங்களது பொழுதுபோக்கு கவிதைகள் ஆயிற்றே..?

கவிதைகள் எழுதுகிறேன். திருமணத்துக்கு பிறகு அதிகமாகி இருக்கிறது. விரைவில் புத்தகமாக வெளியிடப் போகிறேன்.

<MOST RELATED CINEMA NEWS>>

சாமி ஸ்கொயர் படத்தில் மிரட்டும் தேவி ஸ்ரீ பிரசாத் : பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

கசிந்தது 2.0 படத்தின் கதைக்கரு : எதிர்பார்ப்பின் உச்சக் கட்டத்தில் ரசிகர்கள்..!

அடல்ட் படத்தில் நடிப்பீர்களா..? : ஆர்யாவின் பகீர் பதில்..!

தமிழ் இயக்குனரின் வாய்ப்பை நிராகரித்த பிரபல நடிகை..!

11 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் : ஆதங்கத்தை வெளிக்காட்டிய விஜய்சேதுபதி..!

விஜய் 62 படம் குறித்த சுவாரஸ்ய தகவல்..!

சோனம் கபூரின் மெஹந்தி நிகழ்வில் அம்மாவை நினைத்து கண்கலங்கிய ஜான்வி..!

அமீரின் கனவுப்படத்தில் விஜய்யை நடிக்க வைக்க முயற்சி..!

டெட்பூல் 2 : திரை விமர்சனம்..!

Tags :-Namitha opens talk marriage life

**Tamil News Groups Websites**

Our Other Sites News :-

இன்றைய ராசி பலன் 23-05-2018