கனடாவுக்கு மோசமான எதிர்வு கூறல்!

0
598
Canada Tamil News, Canada News, Canada

Canada Weather Alerts

கனடாவின் இந்த ஆண்டு கோடைக் காலமானது எவ்வாறு அமையும் என்ற எதிர்வுகூறலை கனேடிய மத்திய காடடுத்தீ ஆய்வுத் திணைக்களத்தினர் வெளியிட்டுள்ளனர்.

இந்த ஆண்டின் கோடை காலமானது நீண்டகாலத்திற்கு வெப்பம் நிறைந்த நாட்களாகவும், பல்வேறு காட்டுத்தீச் சம்பவங்கள் இடம்பெறக்கூடிய காலப்பகுதியாகவும் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

இந்த கோடை காலம் தொடர்பில் விளக்கமளித்துள்ள கனேடிய இயற்கைவளங்கள் திணைக்களத்தின் மூத்த ஆய்வாளர் ஒருவர், இந்த கோடை காலத்தின் முதல் ஓரிரு வாரங்களில், காட்டுத்தீப் பரவல்கள் ஆரம்பமாகும் என்றும், அவற்றின் எண்ணிக்கை வழக்கமான சராசரியை விடவும் குறைவாகவே காண்பபடும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் அவ்வாறு காட்டுத் தீ பரவலில் எண்ணிக் கை சராசரியை விடவும் குறைவாகவே காணப்படும் என்ற போதிலும, தொடர்ந்துவரும் வரட்சியாக காலநிலை நிலைமையை பெரிய அளவில் மாற்றி அமைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டில நாம் நீண்ட குளிர் காலத்தினை அனுபவித்துள்ளோம் என்பதுடன், வெப்பகாலம் சற்று தாமதமாகவே ஆரம்பமாகின்றது என்றும், எனினும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டில் வெப்பத்தின தாக்கம் அதிகமாகவே இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடு முழுவதிலும் ஏப்ரல் மாதத்தின் இறுதிப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயின் அளவு சராசரியை விடவும் சற்று அதிகமாகவே உள்ளதுடன், நாட்டில் காட்டுத்தீ ஏற்படும் முக்கியமான மூன்று பிராந்தியங்களிலும் இம்முறை காட்டுத்தீப் பரவல் தீவிரமாக காணப்படக்கூடும் எனவும் அவர் முன்னுரைத்துள்ளார்.

சாஸ்காச்சுவானில் ஏற்கனவே காட்டுத்தீ தீவிர சமிக்ஞையைக் காட்டியுள்ள நிலையில், ஏனைய இரண்டு மாநிலங்களிலும் ஏற்கனவே இந்த ஆண்டுக்கான முதலாவது மக்கள் வெளியேற்றம் ஆரம்பமாகி விட்டதனையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மனிட்டோபாவில் கடந்த ஆண்டு இதே காலப்பகுதியில் 27 காட்டுத்தீச் சம்பவங்கள் பதிவான நிலையில், இநத ஆண்டில் இதுவரை 119 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.