யாழில் மின்னல் தாக்கியதில் தீப்பிடித்து எரிந்த தென்னை

0
776
Lightning hitting Jaffna

(Lightning hitting Jaffna)
யாழ். ஓட்டுமடம் பகுதியில் மின்னல் தாக்கியதில் தென்னை மரம் ஒன்று தீப்பற்றி எரிந்த நிலையில், யாழ். மாநகரசபை தீயணைப்பு பிரிவு தீயை அணைத்துள்ளது.

இன்று நண்பகல் யாழ். நகரை அண்டிய பகுதியில் திடீரென கடுமையான இடி மின்னலுடன் மேக மூட்டமாக காணப்பட்டது. இதன்பின்னர் பாரிய வெளிச்சத்துடன் மின்னல் வெட்டியதை தொடர்ந்து, இடிமுழங்கியது.

அந்த மின்னல் யாழ். ஓட்டுமடம் பகுதியில் தென்னை மரம் ஒன்றின் மீது வீழ்ந்ததில் தென்னை மரம் தீப்பிடித்து எரிந்தது. இதனையடுத்து, ஊர் மக்களும் யாழ். மாநகரசபை தீயணைப்பு பிரவும் இணைந்து தீயை அணைத்துள்ளது.

எனினும் இந்த மின்னல் தாக்கத்தினால் உயிரிழப்புக்கள் எதுவும் ஏற்படவில்லை என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

More Tamil News

Tamil News Group websites :

Tags; Lightning hitting Jaffna