இரத்தினபுரியில் சற்றுமுன்னர் கோர விபத்து; பலர் காயம்

0
730
bus accident injures 21 kahawatte

இரத்தினபுரி காஹவத்த பகுதியில் சற்றுமுன்னர் இடம்பெற்ற விபத்தில் 21 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் காயமடைந்தவர்களில் நான்கு பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேகாலை நோக்கி சென்ற தனியார் பஸ்ஸூம் கொடகவெலயில் இருந்து கேகாலைக்கு பயணித்த பஸ்ஸூம் நேருக்கு நேர் மோதியதிலேயே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்தவர்களை உடனடியாக கஹவத்த மற்றும் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

More Tamil News

Tamil News Group websites :

Tags; bus accident injures 21 kahawatte