புனித மக்கா ஹரம் ஷரீஃப் பாதுகாப்பிற்காக சிறிய ரக விமானங்கள் பயன்படுத்த திட்டம்

0
815
Sacred Mecca Haram Sharif planning small airplanes safety

(Sacred Mecca Haram Sharif planning small airplanes safety)

முதன் முதலாக குட்டி விமானங்கள் மக்காவின் புனித ஹரம் ஷரீஃப் பாதுகாப்பிற்காக பயன்படுத்தப்படுகிறது.

இப்புனிதமிகு ரமலானில் ஏராளமான உம்ரா யாத்ரீகர்கள் வருகை தந்து கொண்டுள்ளனர், இது ரமலானின் இறுதிக்குள் மேலும் மேலும் அதிகரிக்கும் என்பதால் முதன்முறையாக புனித ஹரம் ஷரீஃப் பள்ளிக்குள் கூட்டத்தை கண்காணிக்கவும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும், மனிதாபிமான நடவடிக்கைகளை முடுக்கிவிடவும் டிரோன்கள் (Drones) எனப்படும் சிறிய ரக விமானங்கள் பயன்படுத்தப்படவுள்ளன.

சிறிய ரக விமானங்கள் மற்றும் பாதுகாப்பு விமானங்களுடன் (Security aircrafts) ஹரம் ஷரீஃபில் பொருத்தப்பட்டுள்ள 2500 கேமிராக்கள் (CCTV Cameras) மூலமும் ஏற்கனவே கண்காணிக்கப்பட்டு வருகிறது. 2,400 போலீஸ்காரர்களுடன் கூடுதலாக ஹரம் வளாகத்தை சுற்றி 1,300 பேர் காவல் ரோந்துப்பணிகளிலும் ஈடுபடுவர்.

முகத்தில் துன்பநிலையுடன் (அதீத நோய் அறிகுறிகள்) காணப்படும் உம்ரா யாத்ரீகர் அல்லது பார்வையாளர்கள் அவர்களின் பாதுகாப்பையும், உடல்நிலையையும் கருத்திற்கொண்டு ஹரம் ஷரீஃப் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள். அதேபோல் ஹரம் வளாகத்தில் லக்கேஜூடன் வருவதற்கும் அனுமதியில்லை.

புனித மக்காவின் காவல் துறையினர் உம்ரா யாத்ரீகர்களையும், பிற வணக்கசாலிகளையும் ஒழுங்குபடுத்தியும் ஹரம் ஷரீஃபுக்குள் அனுமதித்தல் மற்றும் வெளியேற்றும் பணிகளை நுழைவாயில்கள் மற்றும் கார் பார்க் பகுதிகளிலும் மேற்கொள்வர்.

ஹரம் ஷரீஃபை சுற்றி உம்ரா யாத்ரீகர்களின் வசதிக்காக 6 ஷட்டில் பஸ் நிலையங்கள் பாப் அலி, பான் அஜ்யாத், அல் காஸ்ஸா, சுஆப் அமீர், ஜரோல் மற்றும் ரெய்கா பக்ஷ் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன உம்ரா பாதுகாப்பு படையின் துணை கமாண்டர் மேஜர் ஜெனரல் முஹம்மது அல் அஹ்மதி தெரிவித்தார்.

(Sacred Mecca Haram Sharif planning small airplanes safety)