கண்டி கம்பளை பிரதான வீதியின் போக்குவரத்து பாதிப்பு

0
304
Kandy - Gampola main road traffic impact

(Kandy – Gampola main road traffic impact)
மத்திய மலை நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக மண்சரிவு மற்றும் பாறைகள் சரிவு, மரம் முறிந்து விழுதல் போன்ற அபாயம் நிலவி வருகின்றது.

இந்த நிலையில், கண்டி – கம்பளை பிரதான வீதியில் கம்பளை எத்கால பகுதியில் வீதியில் பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்துள்ளது.

இந்தச் சம்பவம் இன்று அதிகாலை வேளையில் இடம்பெற்றுள்ளதுடன், பிரதான வீதியில் ஒரு பகுதியில் இந்த மரம் முறிந்து விழுந்ததனால், குறித்த வீதியினூடான போக்குவரத்து ஒரு வழிப் போக்குவரத்தாக இடம்பெற்று வருகின்றது.

மரத்தை வெட்டி அகற்றும் பணியில் கம்பளை பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் ஈடுப்பட்டுள்ளனர்.

தற்போது நிலவிவரும் சீரற்ற காலநிலையால் வீதிகளில் மரங்கள் முறிந்து விழுதல் மற்றும் மண்சரிவு அபாயம் ஏற்படுவதனால் வாகனங்களை வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செலுத்த வேண்டும் என்றும் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன், ஆறுகள் வாவிகளுக்கு அருகில் இருப்பவர்கள் மற்றும் மண்சரிவு அபாயம் ஏற்படும் இடங்களில் இருப்பவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

More Tamil News

Tamil News Group websites :

Tags; Kandy – Gampola main road traffic impact