அமெரிக்காவை உலுக்கிய மர்மம்: சிறுமிக்கு நடந்த கொடூரம்

0
1371
Lindsey Baum Mystery Revealed

Lindsey Baum Mystery Revealed

கடந்த 2019 ஆண்டு காணாமல் போன 10 வயது சிறுமியொருவரின் சிதைவுகள் அவரது இல்லத்திலிருந்து பல மைல்கள் தொலைவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சுமார் 10 வருடங்களின் பின்னர் அவரது சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டமையானது மறக்கப்பட்ட ஒரு வழக்குக்கு மீண்டும் புத்துயிர் அளித்துள்ளது.

லின்ட்சே பாவும் என்ற 10 வயதான சிறுமி கடந்த 2009 ஆம் ஆண்டு ஜூன் 26 ஆம் திகதி, நண்பியின் வீட்டிலிருந்து , தனது வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்த போதே காணாமல் போயிருந்தார்.

வொஷிங்டனில் உள்ள சிறிய நகரமொன்றான மெக்கிளியரில், இச்சம்பவம் இடம்பெற்றது.

இந்நிலையில், கிழக்கு வொஷிங்டனில் பின் தங்கிய பகுதியொன்றில், வேட்டைக்குச் சென்றவர்களால் குறித்த சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

கடந்த வருடமே இது கண்டுபிடிக்கப்பட்ட போதிலும், தற்போதே ஆய்வுகள் மூலம் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

இக்குற்றத்தை புரிந்தவரை எப்படியும் பிடித்தே தீருவோமென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் யாருக்கேனும் தகவல் தெரிந்தால் உடனடியாக தகவல் வழங்கும்படி பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.