மார்புக்கச்சைகளை கழற்றி வீசும் நிகழ்வு!

0
1003
Paris breast cancer awareness program

மார்புக்கச்சைகளை கழற்றி வீசும் நிகழ்வு பரிஸில் ஈஃபிள் கோபுரத்தின் முன்பாக இடம்பெற இருக்கிறது. மார்பக புற்றுநோயின் விழிப்புணர்வுக்காக 2010 இலிருந்து இந்த நிகழ்வு தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது.Paris breast cancer awareness program

Pink Bra Toss அமைப்பினர் இந்த நிகழ்வை 2010 இலிருந்து முன்னெடுத்து வருகின்றனர். எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (மே 13) மாலை 3 மணி அளவில் ஈஃபிள் கோபுரத்தின் முன்பாக பல பெண்கள் இந்த நிகழ்விற்காக கூட உள்ளனர்.

இவ் விழிப்புணர்வு நிகழ்வின் போது பல பாடகர்கள், நடன அமைப்பாளர்கள் உள்ளிட்ட பல கலைஞர்கள் கலந்துகொள்வார்கள். அதன் பின்னர் அங்கு கலந்துகொண்ட பெண்கள் தங்கள் மார்புக்கச்சையை கழற்றி மேலே வீசுவார்கள் என அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு, மார்பக புற்றுநோய்க்கு எதிராக தங்கள் விழிப்புணர்வையும், நிதி சேகரிப்புக்கும் உதவுமாறு பொதுமக்களிடம் கோரியுள்ளனர்.

இது தவிர, மார்புக்கச்சை வேண்டாம் எனும் தொனியில் சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள் பதிவேற்றும்படியும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**