தமிழக ஆளுநருக்கு கறுப்புக்கொடி காட்ட சென்ற எம்.எல்.ஏ.க்கள் உட்பட தி.மு.க.வினர் கைது!

0
545
opposition including MLAs blackmailed Governor Arrested

opposition including MLAs blackmailed Governor Arrested

தமிழகத்தின்  விருதுநகர் மாவட்டத்தில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு கறுப்புக்கொடி காட்ட சென்ற 3 எம்.எல்.ஏ.க்கள் உட்பட எதிர்க்கட்சியினரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு எதிராக தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர் கறுப்புக்கொடி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், விருதுநகர்  மாவட்டத்துக்கு சென்றுள்ள  ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில்  சாமி தரிசனம் செய்துள்ளார். மேலும்,  ஆளுநர விருதுநகர்  ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களிடம் மனுபெற செல்லவுள்ளார்.

இதையடுத்து ஆளுந்ர் பன்வாரிலால் புரோஹித்துக்கு எதிராக தி.மு.க., காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியினர் கறுப்புக்கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கறுப்புக்கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட்ட 3 எம்.எல்.ஏ.க்கள் உட்பட எதிர்க்கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

ஆளுந்ர் இன்னும் அங்கு வராத நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொலிசார் கைது செய்துள்ளதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

opposition including MLAs blackmailed Governor Arrested

more Time Tamil News Today

Time Tamil News Group websites :