பிரதி சபாநாயகர் யார்? : ஜனாதிபதி தீர்மானிக்கவில்லை என்கிறார் கரு

0
464
not appointed deputy speaker

(not appointed deputy speaker)
பிரதி சபாநாயகராக யாரை நியமிப்பது என்பது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், இதுவரையிலும் நாடாளுமன்றத்துக்கு அறிவிக்கவில்லையெனத் தெரிவித்த சபாநாயகர் கரு ஜயசூரிய, “ஆகையால், பிரதி சபாநாயகர் தொடர்பில் என்னால் எதனையும் அறிவிக்கமுடியாது” என்றார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (09) மேற்கண்டவாறு பதிலளித்த அவர், “பிரதி சபாநாயகராகக் கடமையாற்றிய, திலங்க சுமத்திபால, அந்தப் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்வதற்கான கடிதத்தைத் தன்னிடம் கையளித்துள்ளார் ”என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளீன் பண்டார, எழுப்பிய ஒழுங்குப் பிரச்சினைக்குப் பதிலளிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை