அரசியல் கைதிகளா? அரசியல் அற்ற கைதிகளா? என்பது அவசியமில்லை: கைதிகளின் விடுதலையே அவசியமானது!

0
450
tamilnews political prisoners release soon duglus devanda

(tamilnews political prisoners release soon duglus devanda)

அரசியல் கைதிகள் என்று இந்த நாட்டில் எவருமே இல்லையென ஏற்கனவே நீதி அமைச்சரும், நாட்டின் தலைவரும் கூறியிருக்கின்றார்கள்.

எனவே, அவர்கள் அரசியல் கைதிகளா? அரசியல் அற்ற கைதிகளா? என்ற தலைப்பு அவசியமில்லை என்றே கருதுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அரசியல் கைதிகள் எனக் குறிப்பிடப்படுவதால்தான் அவர்களது விடுதலைகள் தாமதமாகின்றன.

எனவே, அந்த தலைப்பு தேவையற்றது.

இங்கு தலைப்பு முக்கியமல்ல. அவர்கள் தொடர்பில் நியாயமான ஏற்பாடுகளே அவசியமாகும்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் –

இன்னமும் 110 பேர் இதுவரையில் விடுவிக்கப்படாது பல்வேறு சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் 14 பேருக்கு இதுவரையில் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செயப்படவில்லை என்றும், 44 பேர் மீது குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் தொடரப்பட்டிருப்பினும், அவ்வழக்குகள் இழுத்தடிப்புகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.

35 பேர் குற்றவாளிகளாக ஆக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

இந்தக் கைதிகளின் நிலைமைகளைப் பாரக்கின்றபோது, ‘எய்தவன் போக, அம்புகளை நோக வைத்துக்கொண்டிருக்கின்ற’ கதையாகத்தான் இருக்கின்றது.

எனவே அவர்களது நிலைமைகளை கருத்தில் கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே அவசியமானது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

(tamilnews political prisoners release soon duglus devanda)

More Tamil News

Tamil News Group websites :