பிரான்ஸ் நாட்டு தலைவரின் வார்த்தைகளுக்கு மதிப்பில்லை – ஈரான்!

0
959
Iran khamenei said america made mistake

பல நாடுகளுக்கிடையேயான அணு ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். இதன்மூலம் அவர் “தவறு செய்துவிட்டதாக” ஈரானின் அதி உயர் தலைவரான அயதுல்லா அலி கமேனி கூறியுள்ளார்.Iran khamenei said america made mistake

முன்னதாக, ஈரானுடன் அதிபர் ஒபாமா ஆட்சியின்போது செய்துகொண்ட அணு ஒப்பந்தத்தை அமெரிக்கா முறித்துக் கொள்ளும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இதனை டிரம்ப், உளுத்துப்போன ஒப்பந்தம் என்று வர்ணித்துள்ளதுடன், நாட்டின் குடிமகன் என்ற முறையில் அது தமக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், தனது ஐரோப்பிய கூட்டணி நாடுகளின் ஆலோசனைக்கு மாறாக, அணு ஒப்பந்தம் மேற்கொண்டபோது தளர்த்தப்பட்ட ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை மீண்டும் விதிக்கப்போவதாக டிரம்ப் கூறியுள்ளார்.

அதற்கு பதிலடியாக, அணு எரிசக்தி மற்றும் அணு ஆயுதம் தயாரிக்க உபயோகிக்கப்படும் யுரேனியம் செறிவூட்டும் பணியை மீண்டும் தொடங்குவதற்கான முதற்கட்ட பணிகளை மேற்கொள்ளப்போவதாக ஈரான் கூறியுள்ளது.

ஈரானிய அரசாங்கத்தை சுட்டிக்காட்டி பேசிய அவர், “3 ஐரோப்பிய நாடுகளுடன் அணு ஒப்பந்தத்தை தொடர வேண்டும் என்று நீங்கள் விரும்புவதாக நாங்கள் அறிகிறோம். ஆனால், இந்த மூன்று நாடுகளின் மீதும் எனக்கு நம்பிக்கை இல்லை. நீங்கள் ஒப்பந்தத்தை தொடர விரும்பினால், அந்நாடுகளிடமிருந்து உண்மையான உத்தரவாதங்களை பெறுங்கள், இல்லையெனில் நாளை அவர்கள் அமெரிக்காவைப் போலவே செய்வார்கள்” என்று கமேனி கூறியுள்ளார்.

“அவர்களின் வார்த்தைகளுக்கு மதிப்பில்லை” என்றும் “அவர்கள் இன்று ஒன்றும், நாளை மற்றொன்றும் கூறுவார்கள். அவர்களுக்கு வெட்கமே இல்லை” என்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி போன்ற நாடுகளின் தலைவர்களை அவர் கூறியுள்ளார்.

**Most related Tamil news**

**Tamil News Groups Websites**