தங்க பிஸ்கட்டுக்களுடன் நபரொருவர் கட்டுநாயக்கவில் கைது

0
820
Man arrested Katunayake smuggled gold biscuits

(Man arrested Katunayake smuggled gold biscuits)
சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு இரண்டு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய தங்க பிஸ்கட்டுக்களை கொண்டு வந்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து, விமான நிலைய பொலிஸாரினால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிங்கப்பூரில் இருந்து கட்டுநாயக்க விமானத்திற்கு வந்த குறித்த நபரின் பயணப் பொதியை சோதனை செய்த போதே, இந்த தங்க பிஸ்கட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக விமான நிலையப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட தங்கம் 02 கிலோவும் 100 கிராம் நிறையுடைய 20 தங்க பிஸ்கட்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

46 வயதுடைய கண்டி, தெய்யன்வல பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர் விமான நிலையப் பொலிஸாரால் மேலதிக விசாரணைகளுக்காக சுங்கப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

More Tamil News

Tamil News Group websites :

Tags; Man arrested Katunayake smuggled gold biscuits