காலரா நோயின் பிடியில் ஏமன் மக்கள்!

0
545
World Health Organization Cholera vaccine Yemen Tamil news

(World Health Organization Cholera vaccine Yemen Tamil news)

ஏமன் நாட்டில் காலரா எனப்படும் வாந்திபேதி நோய் தீவிரமாக பரவி வருவதால் அங்கு உலக சுகாதார அமைப்பு தடுப்பூசி முகாம் தொடங்கியுள்ளது.

ஹவுத்தி போராளிகளின் பிடியில் சிக்கிதவிக்கும் ஏமன் நாட்டில் காலரா எனப்படும் வாந்திபேதி நோய் பரவி வருவதால் அங்கு உலக சுகாதார அமைப்பு தடுப்பூசி முகாம் தொடங்கியுள்ளது.

ஏமன் நாட்டின் அரசுக்கு எதிராக ஈரானின் ஆதரவுடன் உள்நாட்டு ஹவுத்தி புரட்சிப் படையினர் கடந்த இரண்டாண்டுகளாக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசுப் படைகளுடன் புரட்சிப் படையினர் நடத்திவரும் மோதலில் பத்தாயிரத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்த படையினருக்கு சவுதி அரேபியா தலைமையிலான இஸ்லாமியப் படைகள் ஆதரவு அளித்து வருகின்றன. இந்த ஆதரவுடன் நாட்டின் தலைநகரான சனாபகுதியை கைப்பற்றியுள்ள புரட்சிப் படையினர் அந்நகரை தங்களது ஆளுமைக்கு உட்படுத்தி வைத்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து சனா நகரில் காலரா எனப்படும் வாந்திபேதி நோய் படுவேகமாக பரவத் தொடங்கியது. ஏமன் நாட்டின் இரண்டாவது தலைநகராக விளங்கும் கடலோர நகரமான ஏடெனை சுற்றியுள்ள நான்கு மாவட்டங்களில் 3,50,000 பேர் வசித்து வருகின்றனர். மழைக்காலத்தில் காலரா நோய் இன்னும் தீவிரமாக பரவும் என சுகாதார ஊழியர்கள் அச்சப்படுவதால் இங்கு உலக சுகாதார நிறுவனம் அந்நாட்டில் தீவிர காலரா தடுப்பூசி முகாம்களை தொடங்கியுள்ளது.

முதலில் நான்கு மாவட்டங்களில் இந்த தடுப்பூசி முகாம்களை தொடங்கியுள்ளது அதன் பிறகு காலராவின் தாக்கம் அதிகம் இருக்கும் பகுதிகளில் இந்த முகாம் படிப்படியாக விரிவுபடுத்தப்படும். நாற்பது லட்சம் மக்களை இலக்காக வைத்து இந்த தடுப்பூசி பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனத்தின் காலரா நோய் நிபுணர் லாரென்சோ பிஸ்ஸோலி நேற்று தெரிவித்திருந்தார்.

ஏமன் நாட்டுக்கு நைரோபி வழியாக கப்பலில் 44 லட்சம் மக்களுக்கு தடுப்பூசிகள் அனுப்பி வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அவற்றில் 14 லட்சம் பேருக்கு கடந்த மாதம் தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என ஏமன் நாட்டுக்கான உலக சுகாதர நிறுவனத்தின் பிரதிநிதி நெவிவோ சகாரியா தெரிவித்துள்ளார்.

Image from  Daily sun
(World Health Organization Cholera vaccine Yemen Tamil news)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Time Tamil News Group websites :