8 வயது தொடக்கம் 16 வயது வரையான சிறுவர்கள் மீது துஸ்பிரயோகம்!

0
603
Child abuse person arrested

பல சிறுவர் மற்றும் சிறுமிகளை பாலியல் துன்புறுத்தல் செய்த குற்றத்திற்காக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.Child abuse person arrested

குறித்த நபர் பா-து-கலேயின் Lens நகரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 8 வயது தொடக்கம் 16 வயது வரையான சிறுவர் மற்றும் சிறுமிகளை பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார்.

இது தவிர, குறித்த நபர் கடந்த ஓகஸ்ட் மாதத்தில் பல சிறுமிகளை காவல்துறை அதிகாரி போன்று வேடமணிந்து பாலியல் துன்புறுத்தல் மேற்கொண்டுள்ளமை தெரிய வந்துள்ளது. காவல்துறை அதிகாரி வேடமணிந்து, சிறுவர்களை கட்டுப்படுத்துவது போல் அவர்களை தொடக் கூடாத இடங்களில் தொட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், காவல்துறையினர் குறித்த நபரை கைது செய்ய முற்படும் போது Lens நகருக்கு தாம் புதிதாக வருகை தந்தது போல் நாடகமாடியுள்ளார். இவர் மேல் பாலியல் துன்புறுத்தல், சிறுவர் துஸ்பிரயோகம் போன்ற பல்வேறு குற்றசாட்டுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், குறித்த நபர் மீது பல குற்றச்சாட்டுக்கள் வரக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

**Most related Tamil news**

**Tamil News Groups Websites**

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here