இந்த கிராமத்து ஆண்களுக்கு யாரும் பெண் கொடுக்க மாட்டார்கள்! என்ன கொடுமை!

0
660
Indian Village Boys Suffering No Marriage Girls Shortage

(Indian Village Boys Suffering No Marriage Girls Shortage)

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் டோல்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு குக்கிராமம் ராஜ்காட் என்பதாகும். இது சம்பல் ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.

350 பேர் மட்டுமே வசிக்கும் இந்த கிராமத்தில் ரோடு வசதி இல்லை. மின்சாரம் கிடையாது. குடிநீர் குழாய்கள் மற்றும் மருத்துவ வசதி எதுவுமே கிடையாது.

இத்தகைய அடிப்படை வசதி எதுவும் இல்லாத இக்கிராமத்தில் வாழும் இளைஞர்களுக்கு கடந்த 22 ஆண்டுகளாக திருமணமே நடைபெறவில்லை

காரணம் எந்தவிதமான அடிப்படை வசதியும் இல்லாத கிராமத்துக்கு தங்களது மகளை திருமணம் செய்து தர அண்டை நகரம் மற்றும் கிராமத்து பெற்றோர் விரும்பவில்லை.

தற்போது ஒரு இளைஞர் செய்துள்ள காரியத்தின் மூலம் இந்த கிராமத்தின் நிலை மாறியுள்ளது . இவர் தனது கிராமத்தின் அவலநிலை குறித்தும், கிராமத்து இளைஞர்கள் திருமணமாகாமல் வருடக்கணக்கில் தவித்து வருவது குறித்தும் வெளி உலகத்தினருக்கு இமெயில், டுவிட்டர் மூலம் உலகிற்கு வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த இளைஞர் அஸ்வனி பராசர் என்பவர் ஜெய்ப்பூர் சவாய்மேன் சிங் அரசு மருத்துவ கல்லூரியில் இறுதி ஆண்டு ‘எம்.பி.பி.எஸ்’ பட்டப்படிப்பு படிக்கிறார்.

அதுமட்டுமன்றி குறித்த இளைஞர் தனது கிராமத்துக்கு ராஜஸ்தான் அரசு ரோடு, குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதியை செய்து தரக்கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடந்துள்ளார்.

22 ஆண்டுகளுக்கு பிறகு ராஜ்காட் கிராமத்தில் ஒரு வாலிபருக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றது.

23 வயதான இவருக்கு அண்டை மாநிலமான மத்திய பிரதேசத்தில் இருந்து மணப்பெண் கிடைத்துள்ளது.இதனால் இந்த திருமண நிகழ்வை கிராம மக்கள் அனைவரும் ஆடிப்பாடி மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்கள்.

Photo Source : Google

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

தெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்! பலமுறை பாலியல் தொல்லைக்கு ஆளானேன் ! நடிகையின் கண்ணீர் வாக்குமூலம்!

நிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும் செய்தி நிறுவனம்!

பெற்ற தாயுடன் பாலியல் உறவு வைத்த மகன்! கோடாரியால் போட்டு தள்ளிய தந்தை!

முழு ஆடையில் உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா! (படங்கள் இணைப்பு)

தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்