UBER செயலிக்கு பிரியாவிடை கொடுக்கும் UBER நிறுவனம்!!

0
463
Uber company offering farewell  Uber processor

(Uber company offering farewell )

மே மாதம் 7ஆம் தேதி, இரவு மணி 12மணிக்குப் பிறகு Uber செயலி செயல்படாது என்பதை Grab நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது, அதற்குப் பிறகு, பயனீட்டாளர்களாலும் ஓட்டுனர்களாலும் அச்செயலியைப் பயன்படுத்த இயலாது.

கடந்த மாதம் 8ஆம் தேதி Uber அதன் செயல்பாட்டை நிறுத்தவேண்டிய நிலை ஏற்பட்டது. இருப்பினும் தொடர்ந்து செயல்பட அதற்கு ஒரு மாதக் கால அவகாசம் தேவைப்பட்டது.

மேலும, அமெரிக்க நிறுவனமான Uberஇன் தென் கிழக்காசிய செயல்பாட்டை, Grab நிறுவனம் மார்ச் 26ஆம் தேதி பெற்றுக்கொண்டது.

இருப்பினும், இன்னும் சிலருக்கோ Grab நிறுவனத்தின்கீழ் 2 வாரங்கள் வாகனங்களை ஓட்டிய பின்னரே எவ்வித அபராதமுமின்றி வாகனத்தைத் திருப்பிக் கொடுக்க முடியும் என்றுக் கூறப்பட்டிருந்தது.

அதோடு , Grab நிறுவனத்தின் கீழ் வாகனங்களை ஓட்ட விரும்பாதவர்கள், அவற்றை ஒப்படைப்பதற்கு முன் 7 நாள் அவகாசம் அளிக்கவேண்டும் என்று Lion City Rentals கூறியதாக ஓட்டுனர்கள் சிலர் தெரிவித்தனர்.

 tags:-Uber company offering farewell  Uber processor

most related Singapore news

16 வயதிற்கு குறைவானவர்கள் WhatsApp செயலியை பயன்படுத்த தடை!
வெப்ப மண்டல வட்டாரத்தில் பிறந்த பனிக்கரடி இனுக்கா கருணை கொலை
திறந்த வழியாக வரும் சத்தத்தை குறைக்க புதிய கருவி கண்டுபிடிப்பு

**Tamil News Groups Websites**