இன்று அதிகாலை நடந்த கொடூரம் : மனைவியை கொலை செய்த கணவன்!

0
966

(husband killed wife trincomalee)
தனது மனைவியை கணவன் தாக்கி கொலை செய்த சம்பமொன்று, திருகோணமலை, பாலையூற்று பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.

பாலையூற்று முருகன் கோயிலடியைச் சேர்ந்த 26 வயதுடைய நல்லிதன் தமயந்தி என்ற பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இருவருக்கும் இடையிலான குடும்பத் தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளது என பொலிஸாரின் ஆரம்ப விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

சம்பவத்தை தொடர்ந்து சந்தேக நபரான 34 வயதுடைய ராசய்யா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Tags:husband killed wife trincomalee, husband killed wife trincomalee

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here