முன்னணி வீரருக்கு உபாதை!!! : மே.தீவுகள் தொடரிலிருந்து வெளியேற்றம்?

0
495
Dimuth Karunaratne joins Sri Lanka injured list 2018

(Dimuth Karunaratne joins Sri Lanka injured list 2018)

இலங்கை அணியின் முன்னணி டெஸ்ட் துடுப்பாட்ட வீரர் திமுத் கருணாரத்ன உபாதைக்கு உள்ளாகியுள்ளதாக கிரிக்கெட் சபையின் தகவல்கள் தெரிவித்துள்ளன.

திமுத் கருணாரத்னவின் இடது கையின் ஆள்காட்டி விரலில் பலத்த உபாதை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் உபாதைக்கு முகங்கொடுத்துள்ள திமுத் கருணாரத்னவுக்கு மேற்கொண்டுள்ள ஏக்ஸ் ரே பரிசோதனைகளுக்கு பின்னர், இவர் சுமார் ஐந்து அல்லது ஆறு வாரங்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் எதிர்வரும் ஜுன் மாதம் நடைபெறவுள்ள மே.தீவுகள் அணிக்கெதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இவர் விளையாடுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

திமுத் கருணாரத்ன நடைபெற்று வரும் உள்ளூர் ஒருநாள் தொடருக்கான பயிற்சியில் ஈடுபட்ட போதே உபாதைக்கு முகங்கொடுத்துள்ளார். இதனால் இந்த போட்டித் தொடரிலும் பங்கேற்க முடியாத சூழ்நிலைக்கு ஆளாகியுள்ளார்.

<<Tamil News Group websites>>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here