இந்தோ – பசிபிக் பிராந்தியத்தில் எந்தவொரு நாடும் ஆதிக்கம் செலுத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று பிரான்ஸ் தெரிவித்துள்ளது.France opposes China’s dominance indo pacific region
இந்தோ – பசிபிக் பிராந்தியத்தில் தமது ஆதிக்கத்தை சீனா விரிவுபடுத்துவதாக கூறுகிறது. இதற்கு மறைமுக எச்சரிக்கை விடுக்கும் விதமாகவே பிரான்ஸ், அவுஸ்திரேலியா போன்ற நாடுகள் இவ்வாறு கூறியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
அரசு முறை விஜயமாக அவுஸ்திரேலியா சென்ற பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோன், அந்நாட்டு பிரதமர் மால்கம் டர்ன்புல் ஐ சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அப்போது இரு நாடுகளுக்கும் இடையே தொழிற் துறை மற்றும் சூரிய மின்சக்தி தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.அதன் பின்னர், இரு தலைவர்களும் சேர்ந்து செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோன் கூறியதாவது,
இந்தோ – பசிபிக் பிராந்தியத்தில் விதிமுறைகளை கடைப்பிடித்து வளரும் நாடுகளை காப்பது முக்கியம். அப்பகுதியில் அமைதிக்கான சமநிலையும் காக்கப்பட வேண்டும். எந்தவொரு ஆதிக்கத்தையும் வளர விடக் கூடாது என்பதும் முக்கியம் என்றார் அவர். அதாவது மறைமுகமாக சீனா ஆதிக்கம் செலுத்துவதாக குறிப்பிட்டார்.
பின்னர் ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல் பேசுகையில், சீனாவின் பொருளாதார வளர்ச்சியை வரவேற்பதாகக் கூறினார். அதேவேளையில், இந்தோ – பசிபிக் பிராந்தியத்தில் அனைத்து தரப்புகளும் இணைந்து செயல்படுவது அவசியம் என்றார் அவர்.
**Most related Tamil news**
- போப் ஆண்டவரின் உதவியாளர் நீதிமன்றத்தில் சரண்!
- 1968 இல் நடந்த மே தின ஊர்வல புகைப்படங்கள்!
- எல்லாவற்றுக்கும் போராடித்தான் வாழ வேண்டுமென்றால் அரசாங்கமும் ஆட்சியும் எதற்கு?
- எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன் ஹன்சிகாவின் அதிரடி
**Tamil News Groups Websites**