கஞ்சா செடிகளை வளர்த்து வந்த இருவர் கைது

0
787
Two men arrested making Ganja plants

(Two men arrested making Ganja plants)
தலவாக்கலை தோட்டம் மற்றும் கட்டுக்கலை தோட்டம் ஆகிய இரு பகுதிகளில் வீட்டு முற்றம் மற்றும் வீட்டுத் தோட்டத்தில் சட்டவிரோதமாக கஞ்சாச் செடியை வளர்த்துவந்த சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தலவாக்கலை பொலிஸாரால் நேற்றைய தினம் ஒருவரும் இன்றைய தினம் ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து, மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, இவ்வாறு கஞ்சா செடிகள் வளர்த்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது.

அத்துடன், தலவாக்கலை தோட்டப் பகுதியிலுள்ள வீட்டுத் தோட்டத்தில் 6 கஞ்சா செடிகளும், கட்டுக்கலை தோட்டப் பகுதியிலுள்ள வீட்டு முற்றத்தில் பூச்செடியில் வளர்த்துவந்த 2 கஞ்சா செடிகளையும் இவ்வாறு பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

இவர்கள் தங்களது வீட்டு முற்றத்திலும், தோட்டத்திலும் யாருக்கும் சந்தேகம் ஏற்படாத வகையில் இந்தச் செடிகளை வளர்த்து வந்துள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிஸார் தெரிவித்தனர்.

இரண்டு அடி உயரமான கஞ்சா செடிகளையும் கைதுசெய்யப்பட்ட இரு சந்தேக நபர்களில் ஒருவரை இன்று நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியதோடு, நாளைய தினம் ஒருவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், இந்தச் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

More Tamil News

Time Tamil News Group websites :

Tags; Two men arrested making Ganja plants

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here