எப்பாவல பொலிஸ் நிலையத்தின் குற்றப்பிரிவின் பொறுப்பதிகாரி சேவை இடைநீக்கம்

0
536
Espawala Investigator Criminal Procedure Service suspension tamilnews

எப்பாவல பொலிஸ் நிலையத்தின் குற்றப்பிரிவின் பொறுப்பதிகாரி, சேவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

உப பொலிஸ் பரிசோதகரான ஆர்.எம்.அபேசேகர என்பவரே இவ்வாறு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அத்துடன், நேற்றைய தினம் முதல் அவரது இடைநீக்கம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அந்த அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

எப்பாவல மாவத்தவௌ பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் வைத்து பெண்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் குறித்த பொலிஸ் அதிகாரி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

குறித்த விகாரையின் முன்னாள் விகாராதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸாரால் பெண்கள் மீது தாக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இதேவேளை, பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பணிப்பின்பேரில், குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் வட மத்திய மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தலைமையில் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

More Time Tamil News Today

Time Tamil News Group websites :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here