வெசாக் தினத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து ஒழுங்கு

0
415
Special Transport Vesak Day srilanka tamil local news

வெசாக் தினத்தை முன்னிட்டு இன்றைய தினமும் விசேட போக்குவரத்து ஒழுங்குகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இன்று இரவு 7 மணி முதல் வீதிகளில் வாகன போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொம்பனித்தெரு, ஸ்ரீமத் ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தை, ஸ்ரீஉத்தரானந்த மாவத்தை, பிரேபூரூக் ப்ளேஸ், டோசன் வீதி மற்றும் விஜேராம வீதி ஆகிய வீதிகளை அண்மித்த பகுதிகளிலேயே இவ்வாறு வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளது.

குறித்த காலப்பகுதியில் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் வாகன சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை, கொழும்பு நகரை அண்மித்த பகுதிகளில் இன்றைய தினமும் முதல் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பாதுகாப்பு பணிகளுக்காக மூவாயிரம் பொலிஸார் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவண் குணசேகர தெரிவித்துள்ளார்.

More Time Tamil News Today

Time Tamil News Group websites :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here