இலங்கைக்கு ஆயுதங்களை கடநத்த முயற்சித்தவர்கள் கைது

0
532
weapons kidnap Indian liberation Tamil tigers suicide drugs latest news

weapons kidnap Indian liberation Tamil tigers suicide drugs latest news
ஆயுதங்களைக் கொள்வனவு செய்து இலங்கைக்கு கடத்த முயற்சித்த குற்றச்சாட்டின் அடிப்படையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் 4 பேருக்கு தமிழக நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

இராமநாதபுரம் மாவட்ட நீதவான் ஏ.கயல்விழியால், கிருஷ்ணகுமார், சுபாஷ்கரன், ராஜேந்திரன் மற்றும் சசிகுமார் ஆகிய நால்வருக்கே நேற்றைய தினம் இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகுமார் மற்றும் சுபாஷ்கரன் ஆகியோருக்கு 10 ஆண்டுகால சிறைத் தண்டனையும், ராஜேந்திரன் மற்றும் சசிகுமார் ஆகியோருக்கு மூன்றரை ஆண்டுகால சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 4ஆயிரம் மற்றும் ஆயிரம் ரூபா அபராதங்களும் விதிக்கப்பட்டுள்ளன.

குறித்த நால்வரும் கடந்த 2014 ஆம் ஆண்டு இராமநாதபுரம் பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சைனைட் குப்பிகள் உள்ளிட்ட மேலும் சில பொருட்களையே அவர்கள் இலங்கைக்கு கடத்த முற்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது என இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

weapons kidnap Indian liberation Tamil tigers suicide drugs latest news

More Time Tamil News Today

Time Tamil News Group websites :

weapons kidnap Indian liberation Tamil tigers suicide drugs latest news

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here