குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கையர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்

0
513
Sri Lankans living Kuwait illegally urged make use of amnesty

(Sri Lankans living Kuwait illegally urged make use of amnesty)

பொது மன்னிப்புக் காலப்பகுதியில் குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த ஆறாயிரத்து 750 இலங்கையர்கள் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

குவைத்திலுள்ள இலங்கைத் தூதரகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

இந்த பொது மன்னிப்புக் காலப்பகுதியில் சிலருக்கு விசா வழங்கப்பட்டு குவைத்திலேயே தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தூதரகம் தெரிவித்துள்ளது.

சட்டவிரோதமாக குவைத்தில் தங்கியுள்ளவர்களை வெளியேறுவதற்கு குவைத் அரசாங்கம் கடந்த ஜனவரி மாதம் 29ஆம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 22ஆம் திகதி வரையான காலப்பகுதியை பொது மன்னிப்புக் காலமாக அறிவித்திருந்தது.

எனினும், இந்த காலப்பகுதி இலங்கை தூதரகத்தின் வேண்டுகோளின் பேரில் ஏப்ரல் மாதம் 22 வரை நீடிக்கப்பட்டிருந்ததாகவும் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

(Sri Lankans living Kuwait illegally urged make use of amnesty)

More Time Tamil News Today

Time Tamil News Group websites :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here