பிரதி பொதுச் செயலாளர் பதவி எனக்கு வேண்டாம் : ருவான்

0
543
UNP deputy general secretary post ruwan wijewardene refused

(UNP deputy general secretary post ruwan wijewardene refused)
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிப் பொதுச் செயலாளர் பதவி தனக்கு வேண்டாம் என கட்சியின் மத்திய செயற்குழுவிற்கு அறிவித்துள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேயவர்தன தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவிக்கு நான் பொருத்தமற்றவன்.

என்னைவிடவும் சிரேஷ்ட உறுப்பினர்கள் கட்சியில் இருக்கின்றனர். அவர்களில் ஒருவருக்கே இந்த பதவியை வழங்க வேண்டும்.

இப்போதைய நிலையில் எனக்கு எந்த பதவியும் வேண்டாம். கட்சியை ஸ்திரப்படுத்த வேண்டும் என்பதே என்னுடைய பிரதான நோக்கமாகும்.

எனக்கு கொடுக்கப்பட்ட பதவிக்கு தகுதியான ஒருவர் கட்சியில் இருக்கின்றார். அவருக்கே இந்த பதவியை வழங்க வேண்டும். நான் ஒருபோதும் யாருக்கும் எதிராக செயற்படமாட்டேன் என்றார்.

More Time Tamil News Today

Time Tamil News Group websites :

Tags:UNP deputy general secretary post ruwan wijewardene refused, UNP deputy general secretary post ruwan wijewardene refused

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here