உலகத்தில் நம்ப முடியாதளவில் அரிய சில சந்தைகள் காணப்படுகிறன. அதிலும் சில சந்தைகள் வியப்பூட்டும் வகையில் அமைந்திருக்கிறன. நாம் கேள்விப்படாத கண்டிராத அப்படிபட்ட ஐந்து முக்கிய சந்தைகளின் விபரங்களை பார்ப்போமேயானால், Women sold fairytale markets world tamil news
பல்கெரியாவில் காணக்கூடிய ஒரு விசித்திரமான சந்தை தான் இது. ஏனென்றால் இங்கு விற்கப்படுவது பெண்கள். குடும்பத்திலுள்ள ஆண்களினால் வீட்டில் உள்ள 18 வயதிற்கு மேற்பட்ட கன்னிப்பெண்கள் இங்கு விற்கப்படுகின்றனர். இந்த சந்தையில் ஒரு ஆண் பெண் ஒருவரை விருப்பப்பட்டால் பெண்ணின் தந்தையிடம் பேசி பின் பெண்ணுக்கும் அந்த நபரை பிடித்து இருந்தால் ஒப்பந்தம் செய்து கொண்டு பணத்தை செலுத்தி அந்த பெண்ணை வாங்கி கொள்ளலாம்.
சீனாவின் வடக்குப் பகுதியில் இருக்கக் கூடிய ஒரு இரவுச் சந்தைதான் இந்த டாங்ஹுவாமென் தொடர் சந்தை, இரவில் மட்டும் நடைபெறும் இந்த சந்தை அசாதாரண உணவு வகைகளுக்கு பெயர்போன இடமாக விளங்குகிறது. சீன உணவு வகைகளும் மற்றும் வினோதமான உணவுகளும் இங்கு கிடைக்கும்.
குறிப்பாக நாய், குரங்கு, கடல்குதிரை, எட்டுக்கால் பூச்சிகள், பூரான், தேள், பட்டுப்புழுக்கள், மற்றும் பல்லிகள் போன்று பல வகையான உணவுகளை இங்கு சமைத்தும், வறுத்தும், பச்சையாகவும் விற்பனை செய்வார்கள்.
கம்போடியாவில் பிரசித்தி பெற்ற உணவுகளில் ஒன்று தான் வறுத்த சிலந்தி, இதற்கென கம்போடியாவில் ஸ்குவான் நகரத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சந்தையொன்றும் இருக்கிறது. அது தான் இந்த சிலந்தி சந்தை, மேலும் இச் சந்தை ஸ்குவான் நகரத்திற்கு வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு மிகவும் பிரபலமான ஒன்றாகும்.
பாரிஸ் நகரில் காணப்படும் சந்தையில் அநேகமான விலங்குகள் பதப்படுத்தப்பட்டு விற்கப்படுகிறது. விலங்குகள் மிகவும் உயிருள்ளவை போன்று காட்சியளிப்பது மிகவும் கவர்ச்சிகரமானது. யானை, சிங்கம், புலி, கரடி, ஒட்டகம், முதலை,பாம்பு, முயல், ஆமை, கிளி, புறா போன்ற மிருகங்கள் மற்றும் காட்டு மிருகங்கள், செல்லப் பிராணிகள் என்று பல வகைப்பட்ட விலங்கினங்கள் இங்கு காணப்படுகிறது. ஆனால் இவற்றின் விலை தான் சற்று அதிகம் சாதாரண முயல் கூட இங்கு ஒரு இலட்சம் ரூபாவிற்கு மேல் விற்கப்படுகிறது.
voodoo market உலகின் மிகப்பெரிய பவள சந்தையான இது ஆபிரிக்காவின் டோகோ நாட்டில் அமைந்துள்ளது. இங்கு மனித மண்டை ஓடுகள், மிருகங்களின் மண்டை ஓடுகள் என பல வகைப்பட்ட மண்டையோடுகள் கிடைக்கும். மேலும் நுகர்வோருக்கு ஏற்ப புதிதாய் மண்டையோடுகளும் இங்கு விற்கப்படும், அத்தோடு குரங்குகளின் தலைகள், இறந்த பறவைகள், முதலைகள், தோல்கள் மற்றும் இறந்த விலங்குகளின் ஏனைய பாகங்கள் ஆகியவற்றை சந்தைப்படுத்துகிறது. இங்கு பில்லி சூனியம் போன்றவைகளுக்கான மண்டையோடுகள், எலும்புகளும் விற்கப்படுகிறது.
tags :- Women sold fairytale markets world tamil news
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
***************************************
- எனது மகன் மிகவும் நல்லவன் ஒசாமா பின்லேடன் தாயார் முதன் முறையாக பேட்டி
- தீ விபத்தில் குழந்தைகளுக்கு உயிரைக்கொடுத்து காப்பாற்றிய தாய்
- படிப்பதற்கு இடையூறு விளைவித்த தந்தையை குத்திக்கொன்ற 3 மகள்கள்
- புவியில் வீழ்ச்சியடைந்து வரும் கிங் பென்குயின் குடித்தொகை
- அழகு தமிழில் சீன சுவர் பற்றி விளக்கமளிக்கும் சீன பெண் – வீடியோ
எமது ஏனைய தளங்கள்