ஹெரோயின் போதைப்பொருள் விநியோகித்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் இருந்து பிணையில் விடுதலையான பெண்ணொருவர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். (woman arrested 180 gram heroin drugs)
180 கிராம் ஹெரோயின் போதைப் பொருளை வைத்துக்கொண்டு, மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது, கொழும்பு தெற்கு ஊழல் தடுப்பு பிரிவினரால் குறித்த பெண் மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைப்பற்றிய ஹெரொயின் போதைப் பொருளின் பெறுமதி 18 இலட்ச ரூபா என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின்படி, பேஸ் லைன் வீதியில் காலை 05 மணியளவில் குறித்த மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களை சோதனை செய்தனர்.
இதன்போது, பெண்ணிடம் இருந்து 109 கிராம் 500 மில்லிகிராமும் ஓட்டுநரிடம் இருந்து 69 கிராம் மற்றும் 900 மில்லிகிராம் ஹெரொயினும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இந்தப் போதைப் பொருளை மருதானை, பொரள்ளை, பாலத்துறை, சகஸ்புர மற்றும் தெமட்டகொடை உள்ளடங்களாக பல பிரதேசங்களுக்கு மொத்தமாக விற்பனை செய்கின்றமையும் இதன்போது கண்டறியப்பட்டுள்ளது.
சந்தேக நபரான இந்தப் பெண்ணின் கணவன் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டவர் எனவும், போதைப் பொருள் விநியோகிக்கும் மற்றுமொறு குழுவுடன் ஏற்பட்ட மோதலில் கொலை செய்யப்பட்டுள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.
இதன்பின்னர் குறித்த பெண்ணே போதைப் பொருள் விற்கும் தொழிலை மேற்கொண்டு வந்துள்ளார்.
புத்கமுவ பிரதேசத்தில் வசிக்கும் இந்த பெண்னின் வயது 31 எனவும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநரின் வயது 24 எனவும் கைப்பற்றிய ஹெரொயின் மற்றும் மோட்டார் சைக்கிள் அனைத்தும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பொரள்ளை பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- கழிவறைக்குச் சென்ற 60 வயது பெண் பாலியல் துஷ்பிரயோகம்; 38 வயது நபர் கைது
- கள்ளக்காதலியுடன் உல்லாசம்; 07 வயது மகளுக்கு போதைமருந்து கொடுத்த தந்தை
- சாவகச்சேரியில் வாள் வெட்டுத் தாக்குதல்; தங்க நகைகள் கொள்ளை
- குழந்தைகளுக்கு வாய் புற்றுநோய் பரவும் அபாயம்; அதிர்ச்சித் தகவல்
- கேவலமாக நடத்தப்பட்ட முன்னாள் போராளி; மனித உரிமை பேரவையில் முறைப்பாடு
- ஜனாதிபதி மற்றும் பிரதமரை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவு
- வயோதிபர் மூன்று பிள்ளைகளின் தாயை கள்ளக்காதல் தொடர்புக்கு அழைப்பு
- 18 வயது பெண்ணை திருமணம் செய்த சிறுவன்; பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு
- பாதாள உலக தலைவர்கள் எனக்கூறி கப்பம் கோரும் கும்பல்
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Tags; woman arrested 180 gram heroin drugs