இலகுவான இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடும் இலங்கை தடுமாற்றம்!

0
740
West Indies vs Sri Lanka 3rd Test news Tamil

மே.தீவுகளுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் இலங்கை அணி 144 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடி வருகின்றது.

போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டம் மாத்திரமே முடிவடைந்துள்ள நிலையில், மே.தீவுகள் அணி தங்களது இரண்டு இன்னிங்ஸ்களையும், முடித்துள்ளதுடன், இலங்கை அணியும் தங்களது முதல் இன்னிங்ஸை முடித்து இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடி வருகின்றது.

இதன்படி நேற்றைய ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 81 ஓட்டங்களுக்கு 5 விக்கட்டுகளை இழந்துள்ளது.

இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மே.தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

இதன்படி ஆடிய மே.தீவுகள் அணி முதல் இன்னிங்ஸில் 204 ஓட்டங்களுக்கு சுருண்டது.

மே.தீவுகள் அணிசார்பில் ஜேசன் ஹோல்டர் 74 ஓட்டங்களையும், டொவ்ரிச் 71 ஓட்டங்களையும் அதிகமாக பெற்றுக்கொடுக்க, ஏனைய வீரர்கள் தொடர்ந்து விக்கட்டுகளை பறிகொடுத்தனர்.

இலங்கை அணிசார்பில் பந்துவீச்சில் லஹிரு குமார 4 விக்கட்டுகளையும், கசுன் ராஜித 3 விக்கட்டுகளையும் வீழ்த்தினர்.

பின்னர் தங்களது முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய வெறு்ம் 154 ஓட்டங்களுக்கு சுருண்டது. இலங்கை அணிசார்பில் டிக்வெல்ல அதிகபட்சமாக 42 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, ஜேசன் ஹோல்டர் 4 விக்கட்டுகளை வீழ்த்தினர்.

இந்நிலையில் தங்களது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த மே.தீவுகள் அணி இலங்கை அணியின் வேகப்பந்துக்கு முகங்கொடுக்க முடியாமல் 93 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

மே.தீவுகள் சார்பில் அதிகபட்சமாக கீமா ரோச் 23 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, இலங்கை அணிசார்பில் லக்மால் மற்றும் ராஜித தலா 3 விக்கட்டுகளையும், லஹிரு குமார 2 விக்கட்டுகளையும் வீழ்த்தினர்.

இதன்படி மே.தீவுகள் நிர்ணயித்த 144 ஓட்டங்களை நோக்கி துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி 81 ஓட்டங்களுக்கு 5 விக்கட்டுகளை இழந்தது. இலங்கை அணிசார்பில் குசால் மெண்டிஸ் 25 ஓட்டங்களுடனும், டில்ருவான் பெரேரா ஒரு ஓட்டத்துடனும் துடுப்பெடுத்தாடி வருகின்றனர்.

மே.தீவுகள் சார்பில் அபாரமாக பந்து வீசி வரும் ஜேசன் ஹோல்டர் 4 விக்கட்டுகளையும், கீமா ரோச் ஒரு விக்கட்டினையும் வீழ்த்தியுள்ளனர்.

<<மேலும் பல விளையாட்டுச் செய்திகளுக்கு>>

<<எமது மேலதிக செய்தி இணையத்தளங்கள்>>

West Indies vs Sri Lanka 3rd Test news Tamil, West Indies vs Sri Lanka 3rd Test news Tamil, West Indies vs Sri Lanka 3rd Test news Tamil