இல்-து-பிரான்சுக்குள் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு கோடை காலத்தில் கடும் வெப்பம் பதிவாகியுள்ளதாக பிரெஞ்சு வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. Water controls France heavy heat
கடந்த ஜூன்-ஜூலை மாதங்களில் பதிவான அதிகூடிய வெப்பமான 22.4 ° C, இதே மாதங்களில் ஏற்பட்டிருக்கவில்லை. குறிப்பாக Essonne மாவட்டம் மிக மோசமான அளவு கடும் வெப்பத்துக்கு உள்ளானதாகவும், மிக குறைந்ததளவு மழையை சந்தித்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கமான கோடை கால ஆரம்ப நாட்களில் நிலவுவதை விட இவ்வருடம் கோடைகால ஆரம்பத்தில் 30°C வரை அதிகமாக வெப்பம் நீடித்தது.
Brétigny-sur-Orge பகுதியில் பத்து மடங்கு குறைவான மழை பதிவாகியுள்ளது. இது தவிர 2006 ஆம் ஆண்டு நிலவிய 21.8 ° C எனும் அதிகூடிய வெப்பத்தை இவ்வரும் 21.9 ° C எனும் வெப்பத்தால் முறியடிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, இல்-து-பிரான்சுக்குள் Essonne மாவட்டம் மட்டுமே தண்ணீர் பயன்பாட்டில் சில கட்டுப்பாடுகளை சந்தித்துள்ளது. பிரான்ஸுக்குள் மொத்தமாக 60 சிறுநகரங்கள் இம்முறை தண்ணீர் கட்டுப்பாடுகளை சந்தித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
tags :- Water controls France heavy heat
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
- பிரான்ஸில் விலையேற்றம் காணும் மின்சாரம், எரிவாயு!
- பிரான்ஸிலுள்ள இந்தியர்களுக்கு விசா தேவையில்லை!
- டொரோண்டோ துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்கள் அடையாளம் காணப்பட்டார்!
- நான் தான் இப்போ கேப்டன் நான் சொல்றத கேளுங்க : பாலாஜியிடம் கெத்து காட்டும் ஐஸ்