புதனன்று Seine-Maritime முழுவதும் எதிர்பாராத எச்சரிக்கை சத்தம் கேட்டது. Warned siren signal heard France Seine-Maritime
புதன்கிழமை Seine-Maritime முழுவதும் கேட்ட ஒரு எதிர்பாராத சைரன் எச்சரிக்கை ஒரு தவறான எச்சரிக்கை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிரான்ஸில் உள்ள அனைத்து நகரங்களிலும் எச்சரிக்கை சைரன்கள் ஒவ்வொரு மாத முதல் புதன்கிழமை அன்று சரியாக இரவு 12 மணிக்கு ஒலிக்கப்பட்டு சோதிக்கப்படும். நார்மண்டி திணைக்களத்திலுள்ளவர்கள் நேற்றைய தினம் கிட்டத்தட்ட பிற்பகல் 4 மணிக்கு அதனை மீண்டும் ஒலிக்க வைத்தனர். இது ஆயிரக்கணக்கான மக்களிடையே குழப்பங்களையும், கவலையையும் தூண்டியது. இச் சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரவியது.
இவ் சைரன் எச்சரிக்கை, ஏதேனும் பேரழிவு ஏற்பட போவதாயின் ஒலிக்கப்படும். ஆதலால், அப் பகுதியில் பெரும் பதட்டம் நிலவியது.
இதனால் அதிகாரிகள் உடனடியாக செயற்பட்டதுடன், சமூக ஊடகங்களில் அவ் சமிக்ஞை தவறாக ஒலிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
**Most related Tamil news**
- ரஜினியின் 2.0 வெளி வருமா?
- பரிஸில், பாலியல் பலாத்காரத்திற்கு 10 வருடத்தின் பின்னர் தீர்ப்பு!
- எல்லாவற்றுக்கும் போராடித்தான் வாழ வேண்டுமென்றால் அரசாங்கமும் ஆட்சியும் எதற்கு?
- இணையத்தளங்கள் ஊடாக இலங்கையர்கள் பலரை ஏமாற்றி பணம் பெற்றுக்கொள்ளும் சர்வதேச வர்த்தகம்!
**Tamil News Groups Websites**