வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பா ளர் விக்னேஸ்வரனா? மாவையா? என்று பேசிக் கொண்டிருக்கின்றோம். வன்னியைச் சேர்ந்த ஒரு வரின் பெயரை ஏன் உங் களால் உச்சரிக்க முடிய வில்லை? இங்கு எத்தனை இயக்கப் போராளிகள் இருக்கின்றார்கள். அவர் களிலிருந்து ஒருவரை முத லமைச்சர் வேட்பாளராக ஏன் உச்சரிக்கமுடிய வில்லை? இவ்வாறு வன்னி மாவட்ட முன்னாள் நாடா ளுமன்ற உறுப்பினர் வினோ நோதராதலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார்.(vino noharadalingam)
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தன் மற்றும் அவரது புதல்வரின் 20 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு வவுனியாவில் நேற்று இடம்பெற்றது. இதில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
சகோதரப் படுகொலை ஊடாக இழக்கப்பட்ட இரு உயிர்களை இங்கே நினைவுகூருகின்றோம். இன்று நாம் சந்திக்கும் துன்பியல்களுக்கு இது ஒன்றே காரணமாக அமைந்துள்ளது.
இன்று நாம் ஐக்கியத்தைப் பற்றிப் பேசுகின்றோம். முன்பு எம்மிடம் ஆயுதம் இருந்தபோது ஐக்கியம் பற்றிப் பேசவுமில்லை, சிந்திக்கவும் இல்லை. இன்று எம்மிடம் ஆயுதம் இல்லை. அதனால் ஐக்கியத்தைப் பற்றி பேசிக்கொண்டிருக்கின்றோம். எம்மிடம் ஆயுதம் இருந்திருந்தால் அது பற்றிப் பேசியிருக்கமாட்டோம்.
எமது ஆயுதங்களே பேசிக்கொண்டிருக்கும். இது தான் உண்மை. நாம் எல்லோருமே தவறுவிட்டிருக்கிறோம். அனைத்தும் முடிந்த பின்பு ஐக்கியத்தை பற்றிபேசுகின்றோம். இன்று மிதவாதத் தலைவர்களைப் பார்த்து இயக்கங்கள் குறை சொல்லிக் கொண்டிருக்கின்றன.
நாங்கள் அவர்களைப் பார்த்துக் குறைசொல்வதற்கு எங்களுக்குத் தகுதி இருக்கிறதா? போராட்ட இயக்கங்கள் அனைத்தும் தமிழ் மக்களது விடுதலை மற்றும் அபிவிருத்தி சார்ந்த விடயங்களில் ஒன்றிணைந்து செயற்பட முடியுமா? ஒரு நாளும் இல்லை. பின்னர் ஏன் மிதவாதத் தலைவர்களை குறைசொல்லிக் கொண்டிருக்கிறோம். அதனை நிறுத்த வேண்டும்.
இன்று வடக்குக்கு முதலமைச்சர் யார்? விக்கினேஸ்வரனா?, மாவையா? என்று பேசிக்கொண்டிருக்கிறோம். ஏன் வன்னியில் இருந்து ஒரு பெயரை உங்களால் உச்சரிக்க முடியவில்லை? எத்தனை போராளி இயக்கங்கள் இங்கு இருக்கின்றன. அதற்குள் இருந்து ஒரு முதலைமைச்சரின் பெயரை உச்சரிக்க முடியவில்லை. கிழக்கிலே அப்படியான ஒருவர் வரமுடியும் என்றால், இணைந்த வடக்கு – கிழக்கு மாகாணசபையிலே வரமுடியும் என்றால், ஏன் வடக்குக்கு அவ்வாறு ஒருவர் வரமுடியாது? முன்னாள் போராளிகள் பலர் இருக்கிறார்கள். அவர்களுக்கு அந்தத் தகுதி இல்லையா? எங்களுக்குள் நாம் கேட்க வேண்டிய கேள்விகள் பல இருக்கின்றன என்றார்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- அடுத்தவாரம் மஹிந்தவின் முகத்திரையை கிழிக்க உள்ள அநுர : சூடு பிடிக்கும் தெற்கு அரசியல்
- புலித் தலைவர்களும், புலிகளின் விமானிகளும் தப்பிச் சென்றுள்ளனர் : பேட்டியில் கோத்தபாய தெரிவிப்பு
- பாதாள உலகுக்கு சிம்ம சொப்பன அதிகாரியை கொலை செய்தால் 50 லட்சம் பணம் – டுபாயிலிருந்து பேரம்
- அலுகோசு பதவிக்கு கோத்தபாயவே சிறந்தவர்! பிரதி அமைச்சர் கேலிப்பேச்சு!
- கொள்ளுப்பிட்டி – தெஹிவளை கடல்பரப்பில் புதிய கடற்கரைப் பூங்கா
- முஸ்லிம்கள் மக்கள் வாக்களிப்பார்கள், பொது பலசேனாவின் ஆதரவாளர் நானில்லை – கோட்டாபய நம்பிக்கை
- அபாயா அணிந்து முகத்தை மூடுவதால் முஸ்லிம் மாணவிகள் தனிமைப்படுத்தப்படுகின்றனர் – தம்பர அமில தேரர் கவலை
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Tags:vino noharadalingam,vino noharadalingam,vino noharadalingam,