(Veyangoda police arrests 61 young partygoers using drugs)
கேளிக்கை விருந்து நிகழ்வொன்றில் சட்டவிரோதமாக போதைப்பொருட்களை பயன்படுத்திய குற்றச்சாட்டில் 61 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெயங்கொடை பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 53 இளைஞர்களும் 8 பெண்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மதுபோதையில் சென்ற மோட்டார் வாகன சாரதியொருவர் விபத்தொன்றில் சிக்கிய நிலையில் நேற்றிரவு (26) வெயங்கொடை நகரில் வைத்து கைது செய்யப்பட்டார்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் விருந்தகம் ஒன்றில் வைத்து போதைப் பொருட்களை பயன்படுத்திய ஏனைய சகாக்களை கைது செய்யக் கூடியதாக இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
நண்பர் ஒருவரின் பிறந்த நாள் நிகழ்வில் கலந்து கொண்ட குறித்த இளைஞர்களே கைதானதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
வெயங்கொடை பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
(Veyangoda police arrests 61 young partygoers using drugs)
More Tamil News
- கம்பஹா கல்வி வலய பாடசாலை மாணவர்களுக்கு நாளை விடுமுறை
- நீர் தாங்கியுடன் சென்ற லொறி விமானத்துடன் மோதுண்டு விபத்து
- குழந்தையை கொன்ற கொடூர தந்தைக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை
- வௌ்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்ட ஜனாதிபதி
- போதைப்பொருட்களை பயன்படுத்திய 61 பேர் கைது – 8 பெண்கள் உள்ளடக்கம்
- பின்நோக்கி செலுத்திய லொறியின் சில்லு வயோதிபர் மீது ஏறியதால் நடந்த விபரீதம்
- உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு நிவாரண தொகை ரூ.20 லட்சமாக உயர்வு – முதல்வர் அறிவிப்பு!
- மழை தொடர்ந்து பெய்தால் காசல்ட்றி நீர் தேக்கத்தின் வான்கதவுகளை திறக்க நேரிடும்
- ஸ்டெர்லைட் விவகாரத்தில் தமிழக அரசு மீது குற்றச்சாட்டு – கனிமொழி!
- முக்கிய அரசியல் தலைவர்களின் டயட் பிளான்!
- பிரச்சினைகளை அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கம்