ரொரண்டோவில் சாரதியொருவரின் அட்டகாசம்

3
731

Union Station Accident

ரொரண்டோ ‘Union Station’ பகுதியில் , மோசமாக வாகனம் செலுத்தி மற்றைய வாகனங்கள் மற்றும் சாரதிகளை மோதிய சாரதியொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வெள்ளிக்கிழமை மாலை 8.32 மணியளவில் இவ்வாறான வாகனமொன்று தொடர்பில் தமக்கு தகவல் கிடைத்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சாரதி பயணிகள் பலரை முதலில் மோதியுள்ளதாகவும், பின்னரே வாகனங்களை மோதியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.இதில் யாருக்கும் பெரிய காயங்கள் இல்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இதனைத் தொடர்ந்து அவர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

பின்னர் அவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.