Two killed missile attack Saudi Arabia Mideast Tamil news
ஹவுத்தி போராளிகள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் சவுதி அரேபியாவை சேர்ந்த அப்பாவி பொதுமக்கள் 2 பேர் கொல்லப்பட்டனர்.
Two killed missile attack Saudi Arabia Mideast Tamil news
ஏமன் நாட்டின் அரசுக்கு எதிராக ஈரான் ஆதரவுடன் உள்நாட்டு ஹவுத்தி புரட்சிப் படையினர் கடந்த சில ஆண்டுகளாக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் சனா உள்பட பல பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்து அந்த பகுதிகளை சுற்றி சோதனைச் சாவடிகள் அமைத்துள்ளனர்.
சர்வதேச ஆதரவு பெற்றுள்ள ஏமன் அரசுக்கு சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகள் ஆதரவு அளித்து வருகின்றன. அவர்கள் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து விமான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலில் சில நேரங்களில் அப்பாவி பொதுமக்களும் கொல்லப்படுகின்றனர்.
இந்நிலையில், ஏமனில் இருந்து சவுதி அரேபியா நோக்கி ஹவுத்தி புரட்சி படையினர் தாக்குதல் நடத்தினர். இதில் அப்பாவி பொதுமக்கள் 2 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயம் அடைந்துள்ளனர் என அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன